அதிரை சி.எம்.பி லைனில் பிரதான சாலை அமைக்கும் பணி நாளை துவங்குகிறது. காலை 10.30 மணிக்கு நடைபெறும் துவக்க விழாவில் பட்டுக்கோட்டை சட்டமன்ற உறுப்பினர் கா.அண்ணாதுரை பங்கேற்று சாலை அமைக்கும் பணியை துவக்கி வைக்க உள்ளார். இதுகுறித்து வீடியோ வெளியிட்டிருக்கும் அதிரை முன்னாள் சேர்மனும் தஞ்சை தெற்கு மாவட்ட திமுக பொருளாளருமான எஸ்.எச்.அஸ்லம், நாளை காலை 10.30 மணிக்கு நடைபெற இருக்கும் சி.எம்.பி லைன் சாலை பணி துவக்க விழாவில் அப்பகுதியினர் திரளாக பங்கேற்க வேண்டும் என அழைப்புவிடுத்துள்ளார். மேலும் இந்த பணிக்காக நிதி ஒதுக்கீடு செய்த தமிழ் நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், சட்டமன்ற உறுப்பினர் கா.அண்ணாதுரை, இதற்காக பாடுபட்ட அனைவருக்கும் நன்றி தெரிவிப்பதாக கூறிய அவர், சி.எம்.பி லைன் சாலை தரமான சாலையாக அமையும் என்றார்.
More like this

அதிராம்பட்டினம் பேருந்து நிலையத்தில் மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணி சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம்.
அதிராம்பட்டினம் திமுக மேற்கு கழகம் முன்னிலையில், மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணி கட்சிகள் சார்பில் மத்திய அரசின் மக்கள் விரோத கொள்கைகளை கண்டித்து கண்டன...

கவுன்சிலர் முயற்சிக்கு பாராட்டு – நகரம் முழுவதும் கொசு ஒழிப்பு செய்ய...
அதிராம்பட்டினம் பகுதியில் சமீப காலமாக கொசு தொல்லை அதிகரித்து வருவதால் பொதுமக்கள் பெரும் சிரமத்தை எதிர்கொண்டு வருகின்றனர். குறிப்பாக 17வது வார்டு பகுதிகளில்...

பட்டுக்கோட்டை தொகுதியில் திமுக டிக்கெட்டுக்கு மூவர் மோதல்!
அதிராம்பட்டினம் நிர்வாகிகள் வரிசையாக விருப்பமனு – அரசியல் பரபரப்பு உச்சம்
பட்டுக்கோட்டை சட்டமன்ற தொகுதியில் திமுக சார்பில் போட்டியிட கடும் ஆர்வம் உருவாகியுள்ளது. வரும்...





