Sunday, February 1, 2026

Big breaking: அதிரையுடன் கிராமங்களை இணைக்க வலுக்கும் எதிர்ப்பு! இன்று பிற்பகல் அனைவரும் நகராட்சிக்கு வருமாறு அழைப்பு!!

spot_imgspot_imgspot_imgspot_img

தஞ்சாவூர் மாவட்டம் அதிராம்பட்டினம் நகராட்சியில் உள்ள 27 வார்டுகளிலும் கழிவுநீர்வடிகால் உள்ளிட்ட அடிப்படை கட்டமைப்புகள் முழுமையாக நிறைவேற்றப்படாத சூழலில் சுற்றுவட்டாரத்தில் உள்ள ஏரிபுரக்கரை, நரசிங்கபுரம், மழவேனிற்காடு ஆகிய கிராமங்களை நகராட்சியுடன் இணைக்க திட்டமிட்டுள்ளனர். இதனால் அதிரை நகரின் வளர்ச்சி திட்டங்கள் மந்தமடைந்து முடங்கும் சூழல் உள்ளது. அதுமட்டுமின்றி அதிரையின் பூர்வகுடி மக்கள் தங்களது அரசியல் பிரதிநிதிதுவத்தையும் இழக்க நேரிடும்.

இந்நிலையில் அதிரையுடன் சுற்றுவட்டார கிராமங்களை இணைக்க எதிர்ப்பு தெரிவிக்கும் விதமாக இன்று பிற்பகல் 2மணிக்கு அதிரை நகராட்சி அலுவலகத்தில் அனைத்து ஜமாத் மற்றும் அனைத்து அரசியல், இயக்கங்கள் சார்பில் மனு அளிக்க உள்ளனர். இதில் பொதுமக்கள் அனைவரும் தவறாமல் கலந்துக்கொள்ள வேண்டும் எனவும் அழைப்புவிடுக்கப்பட்டுள்ளது.

இதனிடையே நகராட்சியுடன் கிராமங்கள் இணைக்கப்படும் பட்சத்தில் கிராம மக்கள் பெற்றுவர கூடிய 100 நாள் வேலை திட்டம், விவசாய கடன், வரி சலுகை உள்ளிட்ட ஒன்றிய மாநில அரசு சலுகைகளை கிராமவாசிகள் இனி பெற முடியாத சூழல் உருவாகும். அதுமட்டுமின்றி அவர்தம் கிராமங்களின் ஊராட்சி தலைவர், ஒன்றிய கவுன்சிலர் ஆகிய அரசியல் பிரதிநிதித்துவமும் கிராமவாசிகளிடம் இருந்து பறிக்கப்படும் என்பது குறிப்பிடத்தக்கது.

spot_imgspot_imgspot_imgspot_img
spot_imgspot_imgspot_imgspot_img

More like this

அதிரை: காவல்துறை கொண்டாடிய சமத்துவ பொங்கல் – பொதுமக்களுக்கு இனிப்பு வழங்கி...

அதிராம்பட்டினம் காவல் நிலையத்தில் சமத்துவ பொங்கல் விழா வெகு சிறப்பாக நடைபெற்றது. அதிராம்பட்டினம், ஜனவரி 15: பொங்கல் திருநாளை முன்னிட்டு, அதிராம்பட்டினம் காவல் நிலையத்தில்...

அதிராம்பட்டினம்: ஆனைவிழுந்தான் குளத்தில் ‘மூன்றாம் கண்’ – குப்பை கொட்டினால் அபராதம்!

அதிராம்பட்டினம்: காவல்துறை உறவுகள் ட்ரஸ்ட்டுடன் இணைந்து, ஆனைவிழுந்தான் குளக்கரையில் குப்பை கொட்டுவதைத் தடுக்க, கண்காணிப்பு கேமரா பொருத்தப்பட்டுள்ளது. டாம்டெக் நிறுவனத்தினர் இதை நிறுவி,...

பொங்கல் பரிசு: அனைத்து நியாயவிலை கடைகளிலும்,பெண் காவலர் ஒருவரை நிமிக்க கோரிக்கை!

அதிராம்பட்டினம்: பொங்கல் தொகுப்பு வழங்கும்.நியாய விலை கடைகளில் தலா காவலர் நியமனம் செய்ய வேண்டும் - அய்வா ஃபவுண்டேசன் கோரிக்கை. அதிராம்பட்டினம், ஜன. 7:...
spot_imgspot_imgspot_imgspot_img