Home » அதிரை மக்களுக்கு தென்னக ரயில்வே கொடுத்த புஸ்வானம் – சிறப்பு ரயில்களுக்கு மட்டும்தான் நிறுத்தமா?

அதிரை மக்களுக்கு தென்னக ரயில்வே கொடுத்த புஸ்வானம் – சிறப்பு ரயில்களுக்கு மட்டும்தான் நிறுத்தமா?

by Admin
0 comment

தீபாவளி சிறப்பு ரயிலாக வண்டி எண் 06070/06069 திருநெல்வேலி டூ சென்னை எழும்பூர் இரண்டு மார்க்கத்திலும் இயக்க உள்ளதாக அறிவிப்பு ஆனை ஒன்றை வெளியிட்டுள்ளது.

அதில் மாலை 3 மணிக்கு சென்னை எழும்பூரில் இருந்து புறப்படும் ரயில் அதிகாலை 5 .15மணிக்கு திருநெல்வேலி சென்றடையும் என குறிப்பிட்டு இருக்கிறது.இதில் அதிராம்பட்டினம்,முத்துப்பேட்டை, பேராவூரணி உள்ளிட்ட ஊர்களுக்கு நிறுத்தம் கிடைத்திருக்கிறது.

வரவேற்ககூடிய விடயம் என்றாலும் அவ்வப்போது விழாக்கால ரயில்களை மட்டும் நிறுத்தி செல்வது வேதனை அளிப்பதாக ரயில் உபயோகிப்பாளர்கள் தெரிவிக்கின்றனர்.

தீபாவளி,பொங்கள், கிருஸ்துமஸ்,ரம்ஜான் காலங்களில் மட்டும் அதிரையர்கள் பயணங்கள் மேற் கொள்வதில்லை கடந்த கால ரயில்வே வருவாய்களை புரட்டிப்பார்த்தால் அதிரை மக்கள் எவ்வாறு ரயிலை பயன்படுத்தி உள்ளனர் என்பது புலப்படும்.

எனவே அதிராம்பட்டினம் மக்களின் நீண்ட நாள் நியாமான கோரிக்கையான காரைக்குடி -எழும்பூர் நிரந்தர ரயில் ஒன்றை இயக்க வேண்டும் என்பதும் அந்த ட்ரெயின் அதிரையில் நின்று செல்ல வேண்டும் என்பதேயாகும்.

நிறைவேற்றுமா தென்னக ரயில்வே?

You may also like

About Us

 உங்களுடைய தகவல்களை எங்களுக்கு உடன் அனுப்பி வைக்க தொடர்பு கொள்ளுங்கள்..

Feature Posts

Newsletter