Sunday, February 1, 2026

அதிரை இமாம் மரணத்தில் களங்கம் – களத்தில் இறங்கும் உலமா சபை – முதல்வரை சந்திக்க திட்டம்.?

spot_imgspot_imgspot_imgspot_img

அதிராம்பட்டினம் தரகர் தெரு முகைதீன் ஜும்ஆ பள்ளியில் இமாமாக பணியாற்றியவர் நாசர் இவர் கடந்த 05-2-2022 (ரமலான் மாதம்) அன்று தங்கையின் பிள்ளைபேறுக்காக பட்டுக்கோட்டை சென்று விட்டு திரும்பும் வழியில் முதல் சேரி சர்ச் அருகில் ஏற்பட்ட சாலை விபத்தில் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.

இதுகுறித்து தகவலறிந்து வந்த பட்டுக்கோட்டை காவல் துறையினர் உடலை மீட்டு பட்டுக்கோட்டை அரசு மருத்துவமனைக்கு உடற்கூறு ஆய்விற்காக அனுப்பி வைத்தார்.

பின்னர் உடலை உறவினர்கள், ஜமாத்தார்கள் முன்னிலையில் உடலை அடக்கம் செய்தனர்.

இந்த நிலையில் மறைந்த இமாமின் உடற்கூறு ஆய்வு அறிக்கை கடந்த சில நாட்களுக்கு முன்னர் உறவினர்கள் வசம் ஒப்படைக்கப்பட்டது, அதில் மறைந்த இமாம் மது போதையில் விழுந்து மரணித்துள்ளாக குறிப்பிடப்பட்டுள்ளன.

மிகவும் ஏழ்மையான பின்புலம் கொண்ட இமாமின் குடும்பத்தினர் இது குறித்து பலரிடமும் முறையிட்டதாக கூறப்படுகிறது.

ஒரு பத்திரிக்கையாளர் முன்னின்று இந்தனை வெளிச்சத்திற்கு கொண்டு வந்துள்ளார். இதன் பின் மனித நேய ஜன நாயக கட்சி மாநில தலைவர் தமீமுன் அன்சாரி ஆலோசனை பேரில் நகர மஜக இவ் விவகாரத்தை கையில் எடுத்துள்ளது.

இதனிடையே அதிரை எக்ஸ்பிரஸ் ஊடகத்தின் முக நூல் பக்கத்தில் வெளிடயிடப்பட்ட இந்த செய்தி காட்டு தீ போல பரவ ஆரம்பித்தன.

இது குறித்து மாநில ஜமாத்துல் உலமா சபையினர் இவ்விவகாரத்தில் தாமாக முன்வந்து நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறார்கள்.

அதன் ஒரு பகுதியாக, விரைவில் தமிழக முதல்வரை சந்தித்து இந்த விவகாரம் குறித்து உரிய நடவடிக்கைகளை மேற்கொள்ள மனு அளிக்க உள்ளதாக நம்பத்தகுந்த வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

spot_imgspot_imgspot_imgspot_img
spot_imgspot_imgspot_imgspot_img

More like this

கல்வித்தந்தை மறைவு முதலமைச்சர், முஸ்லீம் லீக் பொதுச்செயலாளர் இரங்கல்.

அதிராம்பட்டினம் இமாம் ஷாஃபி கல்வி அறக்கட்டளையின் நிறுவனர் மற்றும் சீபோல் நிறுவனத்தின் தலைவருமான சிறந்த தொழிலதிபர் எம்.எஸ். தாஜூதீன் அவர்கள் வயது மூப்பின்...

பலநாள் கனவு நிறைவேறியது – உற்சாக வெள்ளத்தில் அதிரையர்கள்!

அதிராம்பட்டினம் வழியாக செல்லும் தாம்பரம் - செங்கோட்டை அதிவிரைவு ரயில் மற்றும் தாம்பரம் - ராமேஸ்வரம் பாம்பன் விரைவு ரயில் ஆகியவற்றுக்கு அதிராம்பட்டினத்தில்...

IUML தேசிய தலைவரை சந்தித்த அதிரை முஸ்லீம் லீக்கினர் – மாநாட்டிற்கு...

அதிராம்பட்டினம் நகர இந்திய யூனியன் முஸ்லிம் லீக் நகர நிர்வாகிகள், கட்சியின் தேசிய தலைவர் பேராசிரியர் தகைசால் தமிழர் கே.எம். காதர் முகைதீன்...
spot_imgspot_imgspot_imgspot_img