Sunday, February 1, 2026

அதிரை: மலம் கசடு,கழிவுநீர் சுத்திகரிப்பு ஆலை வேண்டாம் – போர்கொடி தூக்கிய பகுதி மக்கள்!

spot_imgspot_imgspot_imgspot_img

அதிராம்பட்டினம் நகராட்ச்சிக்கு உட்பட்ட பகுதிகளான,கரையூர் தெரு காந்தி நகர,ஆறுமா கிட்டங்கி தெரு கடற்கரை தெரு தரகர் தெரு பகுதிகளை உள்ளடக்கிய ஏரியாவில் நகராட்சி நிர்வாகம்,கசடு கழிவு நீர் சுத்திகரிப்பு ஆலையை நிறுவ ஒப்பந்தம் ஏற்படுத்தப்பட்டுள்ளன.

இதற்காக ஒன்றிய அரசின் நிதியில் இருந்து 8கோடி ரூபாய் ஒதுக்கப்பட்டு உள்ளதாக கூறப்படுகிறது.

இந்த கசடு கழிவு நீர் ஆலை அங்கு நிறுவினால் அப்பகுதி மக்கள் வாழ வழியற்ற நிலை உருவாகும் என்பதாக அப்பகுதி மக்கள் புலம்பி வந்தனர், இதனிடையே மேற்குறிப்பிட்ட பகுதி ஜமாத்தினர் மற்றும் பஞ்சாயத்தார்கள் ஒன்றிணைந்து, ஆலோசனையில் ஈடுபட்டனர் அப்போது இந்த பிரச்சினையை ஒன்றிணைந்து எதிர்கொள்ள வேண்டும் என முடிவெடுத்தாக தெரிகிறது.

இந்த ஆலை தங்கள் அமைக்க கூடாது என, வலியுறுத்தி பலமுறை நகராட்சி நிர்வாகத்திடம் புகாராக கூறியுள்ளனர் ஆனால் அதனை எல்லாம் செவிமடுக்காத நகராட்சி நிர்வாகம், மலம் கசடு சுத்திகரிப்பு ஆலையை அமைக்க துரித நடவடிக்கைகளை எடுத்து வருகிறது.

இதுகுறித்து முறையாக தாசில்தார் முதல் ஆட்சியர் வரை புகார்கள் பறந்துள்ளன, மாவட்ட ஆட்சியர் தலையிட்டு இதற்கு நல்ல தீர்வு காண்பார் என நம்பிக்கையோடு உள்ளதாக மேற் குறிப்பிடப்பட்டுள்ள பகுதி மக்கள் தெரிவிக்கின்றனர்.

அதனையும் மீறி மலம் கசடு சுத்திகரிப்பு ஆலை அமைக்க நகராட்சி நிர்வாகம் முறபட்டால் மக்கள் திரள் போரட்டத்தை முன்னெடுப்பதை தவிர வேறு வழியில்லை என்கின்றனர் ஆறுமாகிட்டங்கி தெரு,காந்தி நகர் கரையூர் தெரு கடற்கரை தெரு தரகர் தெரு வாழ் பொதுமக்கள்.

spot_imgspot_imgspot_imgspot_img
spot_imgspot_imgspot_imgspot_img

More like this

கல்வித்தந்தை மறைவு முதலமைச்சர், முஸ்லீம் லீக் பொதுச்செயலாளர் இரங்கல்.

அதிராம்பட்டினம் இமாம் ஷாஃபி கல்வி அறக்கட்டளையின் நிறுவனர் மற்றும் சீபோல் நிறுவனத்தின் தலைவருமான சிறந்த தொழிலதிபர் எம்.எஸ். தாஜூதீன் அவர்கள் வயது மூப்பின்...

பலநாள் கனவு நிறைவேறியது – உற்சாக வெள்ளத்தில் அதிரையர்கள்!

அதிராம்பட்டினம் வழியாக செல்லும் தாம்பரம் - செங்கோட்டை அதிவிரைவு ரயில் மற்றும் தாம்பரம் - ராமேஸ்வரம் பாம்பன் விரைவு ரயில் ஆகியவற்றுக்கு அதிராம்பட்டினத்தில்...

IUML தேசிய தலைவரை சந்தித்த அதிரை முஸ்லீம் லீக்கினர் – மாநாட்டிற்கு...

அதிராம்பட்டினம் நகர இந்திய யூனியன் முஸ்லிம் லீக் நகர நிர்வாகிகள், கட்சியின் தேசிய தலைவர் பேராசிரியர் தகைசால் தமிழர் கே.எம். காதர் முகைதீன்...
spot_imgspot_imgspot_imgspot_img