மரண அறிவிப்பு : மர்ஹூம். லெப்பை தம்பி லெப்பை அவர்களின் மகனாரும், மர்ஹூம். லெப்பை கனி அவர்களின் மருமகனும், மர்ஹூம். உமர் லெப்பை, மர்ஹூம். அலியார் ஆகியோரின் மருமகனும், மர்ஹூம். இஸ்மாயில், மர்ஹூம். அஹமது ஹாஜா ஆகியோரின் சகோதரரும், மர்ஹூம். அபூபக்கர், மர்ஹூம். ஹபீப் முஹம்மத் ஆலிம், மர்ஹூம் இதயத்துல்லா, ஜமால் முஹம்மது ஆகியோரின் மச்சானும், எ.எஸ்.பி. முஹம்மது மைதீன் அவர்களின் மாமனாரும், இர்ஃபான் அசரப், அன்வர் இவர்களின் அப்பாவும், அப்துல்லா, ராஷித் சேக்ராஷித், ஹாஜா மைதீன் இவர்களின் தகப்பனாருமாகிய எம்.எல்.ஏ. அபுல் ஹசன் அவர்கள் இன்று அதிகாலை 3-35 மணி அளவில் வபாத்தாகிவிட்டார்கள். இன்னா லில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிவூன்.
அன்னாரின் ஜனாஸா இன்று அஸர் தொழுகைக்கு பிறகு கடற்கரைத் தெரு ஜுமுஆ பள்ளி மையவாடியில் நல்லடக்கம் செய்யப்படும். அன்னாரின் மறுமை வாழ்வு சிறக்க துஆ செய்வோம்.








