Friday, March 20, 2026

அதிரையில் டி.டி.வி தினகரன் பேச்சு!

spot_imgspot_imgspot_imgspot_img

அதிரை பிப் 12

தஞ்சாவூர் மாவட்டம், அதிராம்பட்டினம் பேருந்து நிலையத்தில் கழகத்தின் துணைப்பொது செயலாளரும் ஆர்.கே. நகர் சட்டமன்ற உறுப்பினருமான டி.டி.வி. தினகரன் அவர்கள்  சிறப்புரையாற்றினார், தஞ்சை மாவட்டத்தில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள அவர் அதன் ஒரு பகுதியாக அதிரையில் இன்று மாலை சிறப்புரையாற்றினார்.

தமிழகத்தில் நடைப்பெற்றுக் கொண்டிருக்கின்ற மக்கள் விரோத ஆட்சி மத்திய அரசின் கைப்பாவையாக செயல்படுகிறது என்று கடுமையாக சாடினார், அம்மா ஆட்சி! அம்மா ஆட்சி!! என்று சொல்லிக்கொண்டு வலம் வரும் இன்றைய ஆட்சியாளர்கள் அம்மா அனுமதிக்காத மீத்தேன், ஹைட்ரோகார்பன், நியூட்ரினோ மற்றும் உதய் மின் திட்டம் என அனைத்து மத்திய அரசின் திட்டங்களுக்கும் கையெழுத்திட்டு தமிழக மக்களுக்கு துரோகம் இழைத்து விட்டார்கள் என்றார்.

முத்தலாக் சட்டத்தை கொண்டு வர துடிக்கும் மத்திய அரசு சிறுபான்மை மக்களின் மேல் குறிப்பாக சிறுபான்மை பெண்கள் மீது அக்கறை காட்டுவது போல் பிம்பத்தை உருவாக்குவது மிகவும் விந்தையாக இருக்கிறது என்றார். இக்கூட்டத்திற்கு அதிரை மற்றும் சுற்றுவட்டார மக்கள் திரளானோர் பங்கேற்றனர்.

spot_imgspot_imgspot_imgspot_img

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

spot_imgspot_imgspot_imgspot_img

More like this

அதிரை நகராட்சியின் “உப்பி போன” விளையாட்டுத் திட்டம்!

தஞ்சாவூர் மாவட்டம் அதிராம்பட்டினம் நகராட்சியில், கடந்த சில தினங்களுக்கு முன்பு இளைஞர்களுக்காக வழங்கப்பட்ட விளையாட்டு உபகரணங்கள் முறையான பராமரிப்பின்றி வீணான சம்பவம் பெரும்...

பட்டுக்கோட்டை : அதிமுக கூட்டணியில் மீண்டும் NR போட்டி? – புது...

பட்டுக்கோட்டை சட்டமன்றத் தொகுதியில் வரும் தேர்தலை முன்னிட்டு அரசியல் சூழல் பரபரப்பாகி வருகிறது. குறிப்பாக திமுக கூட்டணியில் வேட்பாளர் தேர்வு குறித்து கட்சித்...

அதிராம்பட்டினம் பேருந்து நிலையத்தில் மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணி சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம்.

அதிராம்பட்டினம் திமுக மேற்கு கழகம் முன்னிலையில், மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணி கட்சிகள் சார்பில் மத்திய அரசின் மக்கள் விரோத கொள்கைகளை கண்டித்து கண்டன...
spot_imgspot_imgspot_imgspot_img