Sunday, February 1, 2026

அதிரையில் குடிநீர் வர உத்தரவாதம் தரப்பட்டதால் போராட்டம் ரத்து..!

spot_imgspot_imgspot_imgspot_img

 

தஞ்சாவூர் மாவட்டம் அதிராம்பட்டினம் பகுதியில் சில நாட்களாக சரியான முறையில் குடிநீர் விநியோகம் செய்யப்படவில்லை என்றும் குறிப்பாக ரமளான் மாதத்தில் தண்ணீர் தட்டுப்பாடு அதிகரித்துள்ளது. தண்ணீர் இல்லாமல் பொதுமக்கள் அவதிக்குள் ஆளாகியுள்ளனர் என தன்னார்வலர்கள் குற்றச்சாட்டினர்.

இதனை முன்னெடுத்து தன்னார்வலர்கள் அதிரை பேரூராட்சிக்கு உட்பட அனைத்து வார்டுகளுக்கு சரியான முறையில் குடிநீர் விநியோகம் செய்யப்பட வேண்டும் என்று பேரூராட்சி அதிகாரிகளிடம் பலமுறை தன்னார்வலர்கள் புகார் அளித்துள்ளார்கள்.

இந்நிலையில் அதிராம்பட்டினம் பேரூராட்சிக்கு உட்பட்ட வார்டு எண் 7 முதல் 12 வரையிலான பகுதிகளில் குடிநீர் சில நாட்களாக வரவில்லை என்று ஆத்திரமடைந்த பொதுமக்கள், தன்னார்வலர்கள் திடீர் சாலை மறியல் போராட்டத்தை அறிவித்துள்ளார்கள்.

இதனையடுத்து அதிரை நகர பேரூராட்சி அதிகாரியான வி.ஏ.ஓ பொதுமக்கள்,தன்னார்வளர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். பிறகு இன்று மாலை 5 மணிக்கு தண்ணிர் சரியான முறையில் விநியோகம் செய்யப்படும் என்று அதிகாரிகள் தெரிவித்தனர்.

அதிகாரிகள் கூறியப்படி குடிநீர் விநியோகம் செய்யப்படவில்லை என்றால் அறிவித்தபடி போராட்டம் நடைபெறும் என்று தன்னார்வலர்கள் தெரிவித்தனர்.

spot_imgspot_imgspot_imgspot_img

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

spot_imgspot_imgspot_imgspot_img

More like this

கல்வித்தந்தை மறைவு முதலமைச்சர், முஸ்லீம் லீக் பொதுச்செயலாளர் இரங்கல்.

அதிராம்பட்டினம் இமாம் ஷாஃபி கல்வி அறக்கட்டளையின் நிறுவனர் மற்றும் சீபோல் நிறுவனத்தின் தலைவருமான சிறந்த தொழிலதிபர் எம்.எஸ். தாஜூதீன் அவர்கள் வயது மூப்பின்...

பலநாள் கனவு நிறைவேறியது – உற்சாக வெள்ளத்தில் அதிரையர்கள்!

அதிராம்பட்டினம் வழியாக செல்லும் தாம்பரம் - செங்கோட்டை அதிவிரைவு ரயில் மற்றும் தாம்பரம் - ராமேஸ்வரம் பாம்பன் விரைவு ரயில் ஆகியவற்றுக்கு அதிராம்பட்டினத்தில்...

IUML தேசிய தலைவரை சந்தித்த அதிரை முஸ்லீம் லீக்கினர் – மாநாட்டிற்கு...

அதிராம்பட்டினம் நகர இந்திய யூனியன் முஸ்லிம் லீக் நகர நிர்வாகிகள், கட்சியின் தேசிய தலைவர் பேராசிரியர் தகைசால் தமிழர் கே.எம். காதர் முகைதீன்...
spot_imgspot_imgspot_imgspot_img