Sunday, February 1, 2026

அதிரை இலியாஸ் தாக்கப்பட்ட வழக்கு! அதிரையர்களுக்கு சொல்லும் செய்தி என்ன?

spot_imgspot_imgspot_imgspot_img

2013ஆம் ஆண்டு மல்லிப்பட்டினம் நோக்கி சென்றுக்கொண்டிருந்த தஞ்சை மாவட்ட எஸ்.டி.பி.ஐ தலைவர் அதிரை இலியாஸை புதுபட்டினம் அருகே வழிமறித்து உதவி ஆய்வாளர்கள் ராஜ்கமல், ரவிச்சந்திரன், பெக்டர் முத்துலட்சுமி கொடூர தாக்குதல் நடத்தி பொய் வழக்கு போட முயன்றனர். இதனையடுத்து அவரை மீட்ட சக எஸ்.டி.பி.ஐ நிர்வாகிகள் உடனடியாக மருத்துவமனைக்கு அழைத்து சென்றனர். இதுகுறித்து மனித உரிமை ஆணையத்தில் அதிரை இலியாஸ் வழக்கு தொடுத்தார். இந்த வழக்கை விசாரித்த நீதிபதி ஜெய்ச்சந்திரன் கொலைவெறி தாக்குதலில் ஈடுபட்ட 3 உதவி ஆய்வாளர்களுக்கும் தலா ரூ.25 ஆயிரம் அபராதம் விதித்து உத்தரவிட்டுள்ளார்.

இந்த தீர்ப்பு குறித்து கருத்து தெரிவித்துள்ள வழக்கறிஞர் Z.முகம்மது தம்பி, சாமானியர்கள் தொடர்ச்சியான சட்ட போராட்டங்களை முன்னெடுப்பதன் மூலம் இதுபோன்ற வெற்றியை பெறலாம் என்றும், அதிகார திமிரில் அலையும் சிலருக்கு இத்தீர்ப்பு சவுக்கடி எனவும் கூறினார். மேலும் அதிரையர்கள் சட்டம் வழங்கியுள்ள அடிப்படை உரிமைகள் குறித்து அறிந்து விழிப்புடன் இருப்பது அவசியம் என வலியுறுத்தியுள்ளார்.

spot_imgspot_imgspot_imgspot_img

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

spot_imgspot_imgspot_imgspot_img

More like this

கல்வித்தந்தை மறைவு முதலமைச்சர், முஸ்லீம் லீக் பொதுச்செயலாளர் இரங்கல்.

அதிராம்பட்டினம் இமாம் ஷாஃபி கல்வி அறக்கட்டளையின் நிறுவனர் மற்றும் சீபோல் நிறுவனத்தின் தலைவருமான சிறந்த தொழிலதிபர் எம்.எஸ். தாஜூதீன் அவர்கள் வயது மூப்பின்...

பலநாள் கனவு நிறைவேறியது – உற்சாக வெள்ளத்தில் அதிரையர்கள்!

அதிராம்பட்டினம் வழியாக செல்லும் தாம்பரம் - செங்கோட்டை அதிவிரைவு ரயில் மற்றும் தாம்பரம் - ராமேஸ்வரம் பாம்பன் விரைவு ரயில் ஆகியவற்றுக்கு அதிராம்பட்டினத்தில்...

IUML தேசிய தலைவரை சந்தித்த அதிரை முஸ்லீம் லீக்கினர் – மாநாட்டிற்கு...

அதிராம்பட்டினம் நகர இந்திய யூனியன் முஸ்லிம் லீக் நகர நிர்வாகிகள், கட்சியின் தேசிய தலைவர் பேராசிரியர் தகைசால் தமிழர் கே.எம். காதர் முகைதீன்...
spot_imgspot_imgspot_imgspot_img