Saturday, March 21, 2026

கோட்டையை வேட்டையாடி வெற்றிக் கோப்பையை வென்ற அதிரை WFC!!

spot_imgspot_imgspot_imgspot_img

கோட்டைப்பட்டினம் அணியினர் சார்பாக மின்னொளி எழுவர் கால்பந்து தொடர் போட்டி கோட்டைப்பட்டினத்தில் நடைபெற்று வந்தது.

இந்த மின்னொளி கால்பந்து தொடர் போட்டிக்கு அதிரை AFFA மற்றும் அதிரை WFC ஆகிய அணிகள் கலந்து கொண்டு விளையாடியது.

இத் தொடரில் அதிரை WFC அணி அட்டகாசமான ஆட்ட நுணுக்கங்களை கொண்டு தனது லீக் போட்டி மூன்றிலும் வெற்றி கண்டதோடு மட்டுமல்லாமல் தொடரையும் வென்று சாம்பியன் பட்டம் பெற்றுள்ளது.

முன்னதாக முதல் லீக் போட்டியில் திருச்சியை எதிர்கொண்ட அதிரை WFC அணி 2-0 என்கிற கோல் கணக்கில் திருச்சியை தினறடித்ததோடு அடுத்தடுத்த போட்டியில் மண்ணார்குடியையும், அதிரை AFFA அணியையும் 1-0 என்கிற கோல் கணக்கில் வீழ்த்தியது.

இறுதிப் போட்டியில் ஸ்பார்ட்டன்ஸ் கோட்டைப்பட்டினத்தோடு, அதிரை WFC களம் கண்டு 2-0 என்கிற கோல் கணக்கில் கோட்டைபட்டின மண்ணிலேயே கோட்டை அணியை வேட்டையாடி முதல் பரிசை பெற்றது.

இப்போட்டியில் WFC அணிக்காக சதாஸ்கான் மற்றும் அன்சர் தலா ஒரு கோல் அடித்து அணியின் வெற்றிக்கு முத்தாய்ப்பாய் இருந்தது குறிப்பிடத்தக்கது.

spot_imgspot_imgspot_imgspot_img

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

spot_imgspot_imgspot_imgspot_img

More like this

ரியாத் தமிழ்ச்சங்க கைப்பந்து போட்டியில் அதிராம்பட்டினம் ஸ்பார்டன் அணி சாதனை!

சவூதி அரேபியா ரியாத் நகரில் தமிழ்ச்சங்கம் சமீபத்தில் நடத்திய சிறப்பு கைப்பந்து போட்டியில், அதிராம்பட்டினம் ஸ்பார்டன் அணி அதிரடி வெற்றி பெற்று முதலிடத்தை...

நான் ரெடி.. நீங்க ரெடியா..?

அதிரை இமாம் ஷாஃபி பள்ளி சார்பில் ஒவ்வொரு வருடமும் டிசம்பர் மாத இறுதியில் மாரத்தான் மற்றும் வாக்கத்தான் போட்டி மனித வாழ்வின் ஆரோக்கியம்...

அதிரையில் நடைபெற்ற விளையாட்டு வீரர்களை பாராட்டி ஊக்கப்படுத்தும் விழா!(படங்கள்)

அதிரை கடற்கரைத்தெரு தீனுல் இஸ்லாமிய இளைஞர்கள் நற்பணி மன்றம் மற்றும் கடற்கரைத்தெரு விளையாட்டு வீரர்கள் இணைந்து நடத்திய விளையாட்டு வீரர்களை ஊக்கப்படுத்தும் பாராட்டு...
spot_imgspot_imgspot_imgspot_img