Sunday, February 1, 2026

சென்னையில் கடத்தப்பட்ட குழந்தை முஹம்மது சாது மீட்பு

spot_imgspot_imgspot_imgspot_img

சென்னை ஆர்.கே.நகர் அருகே உள்ள நேதாஜி நகரில் நேற்று கடத்தப்பட்ட 3 வயது குழந்தை மீட்கப்பட்டுள்ளது.  கடத்தப்பட்ட 3 வயது சிறுவன் முகமது சாதுவை   கொடுங்கையூர் அருகே போலீசார் மீட்டனர். சிறுவனை தண்டையார்பேட்டையில் உள்ள கஸ்தூரி பாய் நகரில் போலீசார் மீட்டனர். தண்டையார்பேட்டை நேதாஜி நகர் 2வது தெருவை சேர்ந்தவர் முகமது இலியாஸ் (24). இவர் கீழ்ப்பாக்கம் மருத்துவமனை பகுதியில் சாலையோரத்தில் துணிக்கடை வைத்துள்ளார். இவரது மனைவி பரகத் நிஷா (20). இவர்களுக்கு முகமது சாது என்ற இரண்டரை வயது மகனும், பிறந்து 15 நாளே ஆன பெண் குழந்தையும் உள்ளது.

முன்னதாக, நேற்று காலை வழக்கம்போல் முகமது இலியாஸ் கடைக்கு சென்றுவிட்டார். மதியம் 12 மணியளவில் வீட்டு முன் விளையாடிக்கொண்டிருந்த முகமது சாகீப் வெகுநேரம் ஆகியும் வராததால் பரகத் நிஷா வெளியில் வந்து பார்த்துள்ளார். அங்கு மகன் இல்லை என்றதும் அக்கம்பக்கத்து வீட்டுக்கு சென்று விசாரித்துள்ளார். ஆனால் யார் வீட்டுக்கும் குழந்தை செல்லவில்லை என்று தெரிந்தது.

இதுகுறித்து ஆர்.கே.நகர் போலீசில் புகார் கொடுத்தார். போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வந்தநிலையில்  சிறுவன் முகமது சாகீபை கொடுங்கையூர் அருகே போலீசார் மீட்டனர்

spot_imgspot_imgspot_imgspot_img

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

spot_imgspot_imgspot_imgspot_img

More like this

கல்வித்தந்தை மறைவு முதலமைச்சர், முஸ்லீம் லீக் பொதுச்செயலாளர் இரங்கல்.

அதிராம்பட்டினம் இமாம் ஷாஃபி கல்வி அறக்கட்டளையின் நிறுவனர் மற்றும் சீபோல் நிறுவனத்தின் தலைவருமான சிறந்த தொழிலதிபர் எம்.எஸ். தாஜூதீன் அவர்கள் வயது மூப்பின்...

பலநாள் கனவு நிறைவேறியது – உற்சாக வெள்ளத்தில் அதிரையர்கள்!

அதிராம்பட்டினம் வழியாக செல்லும் தாம்பரம் - செங்கோட்டை அதிவிரைவு ரயில் மற்றும் தாம்பரம் - ராமேஸ்வரம் பாம்பன் விரைவு ரயில் ஆகியவற்றுக்கு அதிராம்பட்டினத்தில்...

IUML தேசிய தலைவரை சந்தித்த அதிரை முஸ்லீம் லீக்கினர் – மாநாட்டிற்கு...

அதிராம்பட்டினம் நகர இந்திய யூனியன் முஸ்லிம் லீக் நகர நிர்வாகிகள், கட்சியின் தேசிய தலைவர் பேராசிரியர் தகைசால் தமிழர் கே.எம். காதர் முகைதீன்...
spot_imgspot_imgspot_imgspot_img