Friday, March 20, 2026

திமுக ஆட்சிக்கு வந்தால் மாணவர்களின் கல்விக்கடன் ரத்து செய்யப்படும் – மு.க. ஸ்டாலின் வாக்குறுதி !

spot_imgspot_imgspot_imgspot_img

திண்டுக்கல் மாவட்டம் நிலக்கோட்டை அருகே பள்ளபட்டி கிராமத்தில், திமுக சார்பில் கிராம சபை கூட்டம் நடைபெற்றது. திமுக தலைவர் மு.க ஸ்டாலின் தலைமையில் நடைபெற்ற கிராம சபை கூட்டத்தில், முதலில், காஷ்மீர் புல்வாமா தற்கொலைப்படைத் தாக்குதலில் உயிர் தியாகம் செய்த துணைராணுவப்படை வீரர்களுக்கு மெளன அஞ்சலி செலுத்தப்பட்டது.

இதனைத் தொடர்ந்து, கிராம மக்களுடன் உரையாடி, அவர்களின் குறைகளை கேட்டறிந்த மு.க.ஸ்டாலின், பின்னர், அவர்கள் மத்தியில் பேசினார். அப்போது, திமுக ஆட்சிக்கு வந்தால் ஒருவர் யார் என்றாலும் எந்த கட்சியை சேர்ந்தவர் என்றாலும், பாரபட்சமின்றி முதியோர் உதவித்தொகை வழங்கப்படும் என்றார்.

மேலும், நாட்டின் எதிர்காலமாக திகழும் மாணவர்களின் நலன்கருதி, கல்விக்கடன் முழுவதும் ரத்து செய்யப்படும் என்றும் மு.க.ஸ்டாலின் வாக்குறுதி அளித்துள்ளார்.

spot_imgspot_imgspot_imgspot_img

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

spot_imgspot_imgspot_imgspot_img

More like this

பட்டுக்கோட்டை: மீண்டும் அண்ணாத்துரைக்கே வாய்ப்பு? – அரசியல் கள ஆய்வில் வெளிச்சம்.

தஞ்சாவூர் மாவட்டத்தின் முக்கிய அரசியல் கவனத்தை ஈர்த்துவரும் பட்டுக்கோட்டை சட்டமன்ற தொகுதியில் அடுத்த சட்டமன்றத் தேர்தலை முன்னிட்டு அரசியல் சூழல் சூடுபிடித்து வருகிறது....

பட்டுக்கோட்டை : அதிமுக கூட்டணியில் மீண்டும் NR போட்டி? – புது...

பட்டுக்கோட்டை சட்டமன்றத் தொகுதியில் வரும் தேர்தலை முன்னிட்டு அரசியல் சூழல் பரபரப்பாகி வருகிறது. குறிப்பாக திமுக கூட்டணியில் வேட்பாளர் தேர்வு குறித்து கட்சித்...

அதிராம்பட்டினத்தில் கேஸ் விநியோகத்தில் தாமதம் – செயற்கை தட்டுப்பாடு உருவாக்கப்படுகிறதா?

அதிராம்பட்டினம் மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் சமீப நாட்களாக சமையல் எரிவாயு (LPG) விநியோகத்தில் கடுமையான தாமதம் ஏற்பட்டுள்ளதாக பொதுமக்கள் குற்றம் சாட்டுகின்றனர். புக்கிங்...
spot_imgspot_imgspot_imgspot_img