Friday, March 20, 2026

நாளை தேர்தல் நடைபெற உள்ள நிலையில் ஆவடி அருகே 1,381 கிலோ தங்கம் பறிமுதல் !!

spot_imgspot_imgspot_imgspot_img

நாளை தேர்தல் நடைபெற உள்ள நிலையில், தமிழக – ஆந்திர எல்லை பகுதியில் தேர்தல் பறக்கும் படையினர் தீவிர வாகன சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர். அப்போது, அந்த வழியாக வந்த மினி லாரியை நிறுத்தி சோதனை நடத்தியதில் தங்க மூட்டைகள் இருந்தது தெரிய வந்தது.

ஒவ்வொரு மூட்டையும், 25 கிலோவாக இருந்தன. ஓட்டுநரையும், அவருடன் இருந்த மற்றோருவரையும் விசாரித்ததில், திருப்பதி தேவஸ்தானத்திற்கு சொந்தமான தங்கம் என தெரிவித்ததாக கூறப்படுகிறது.

திருப்பதி தேவஸ்தானத்துக்கு கொண்டு செல்லப்பட்ட தங்கம் என்றாலும், உரிய ஆவணங்கள் இல்லாததால், 1381 கிலோ தங்கத்தை பறிமுதல் செய்த தேர்தல் பறக்கும் படையினர் பூந்தமல்லி காவல்நிலையத்தில், வாகனத்துடன் தங்கத்தை ஒப்படைத்தனர். அங்கு, தொடர்ந்து விசாரணை நடைபெற்று வருகிறது.

இதற்கிடையே, இந்தியா முழுவதும் இதுவரை ரூ.2628.43 கோடி மதிப்பிலான பணம் மற்றும் பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ள நிலையில், தமிழகம் முதலிடத்தில் உள்ளதாக தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது. தமிழகத்தில் இதுவரை ரூ.514.57 கோடி மதிப்பிலான பணம் மற்றும் பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

spot_imgspot_imgspot_imgspot_img

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

spot_imgspot_imgspot_imgspot_img

More like this

தேர்தல் 2026 : திமுக கூட்டணியில் முஸ்லீம் லீக், மமகவுக்கு 2...

தமிழ்நாடு சட்டசபை தேர்தல் ஏப்ரல் மாதத்தில் நடைபெற உள்ளது. இந்த தேர்தலில் தி.மு.க. தலைமையில் மெகா கூட்டணி அமைக்கப்பட்டு உள்ளது. இந்த கூட்டணியில்...

IUML தேசிய தலைவரை சந்தித்த அதிரை முஸ்லீம் லீக்கினர் – மாநாட்டிற்கு...

அதிராம்பட்டினம் நகர இந்திய யூனியன் முஸ்லிம் லீக் நகர நிர்வாகிகள், கட்சியின் தேசிய தலைவர் பேராசிரியர் தகைசால் தமிழர் கே.எம். காதர் முகைதீன்...

அதிரை ரயில் நிறுத்தம் தொடர்பாக போராட்டம்தான் தீர்வு என்றால் அதற்கும் தயார்- ...

அதிராம்பட்டினம் ரயில் நிறுத்தம் தொடர்பாக தேவைப்பட்டால் திமுக, காங்கிரஸ், முஸ்லீம் லீக் உள்ளிட்ட தோழமை கட்சிகளை ஒன்றிணைத்து ஒன்றிய ரயில்வே நிர்வாகத்தை கண்டிக்கும்...
spot_imgspot_imgspot_imgspot_img