Home » மூடப்பட்டது ஜெட் ஏர்வேஸ்!!

மூடப்பட்டது ஜெட் ஏர்வேஸ்!!

0 comment

வங்கிகள், அவசர நிதியுதவி வழங்க மறுத்து விட்டதால், ‘ஜெட் ஏர்வேஸ்’ விமான சேவை நேற்றுடன் தற்காலிகமாக முடிவுக்கு வந்துவிட்டது.

இந்நிறுவனம், 8,000 கோடி ரூபாய் கடனில் சிக்கியுள்ளது. இதையடுத்து, வங்கிகள் கூட்டமைப்பின் யோசனைப்படி, ஜெட் ஏர்வேஸ் நிறுவனர், நரேஷ் கோயல், தன் பங்கு மூலதனத்தை குறைத்துக் கொண்டார். இயக்குனர் குழுவில் மாற்றம் செய்து, 75 சதவீத பங்குகளை விற்க, வங்கிகள் கூட்டமைப்பு முயற்சித்தது. அது பலனளிக்க வில்லை. அதனால், இக்கூட்டமைப்பால் உறுதி அளித்தபடி, ஜெட் ஏர்வேஸ் நிறுவனத்தில், 1,500 கோடி ரூபாய் முதலீடு செய்ய முடியவில்லை.

இந்நிலையில், குத்தகைக்கு விமானங்களை அளித்த நிறுவனங்கள், பெரும்பாலான விமானங்களை திரும்பப் பெற்றுக் கொண்டன. அதனால், 2018, டிசம்பரில், 123 ஆக இருந்த விமானங்களின் எண்ணிக்கை, தற்போது, ஐந்தாக குறைந்து விட்டது. உடனடியாக, 400 கோடி ரூபாய் நிதியுதவி அளித்தால், சேவையை தொடரலாம் என, ஜெட் ஏர்வேஸ் தெரிவித்தது. ஆனால், மேற்கொண்டு நிதியுதவி அளிக்க, வங்கிகள் மறுத்து விட்டன. இதனால், ஜெட் ஏர்வேஸ் விமான சேவை, தற்காலிகமாக முடிவுக்கு வந்தது…

You may also like

Leave a Comment

About Us

 உங்களுடைய தகவல்களை எங்களுக்கு உடன் அனுப்பி வைக்க தொடர்பு கொள்ளுங்கள்..

Feature Posts

Newsletter