Monday, March 23, 2026

தமிழகத்தில் திமுக-காங்கிரஸ் கூட்டணி அசுர வெற்றி பெறும் : எக்ஸிட் போல் முடிவுகள் !

spot_imgspot_imgspot_imgspot_img

லோக்சபா தேர்தல் தற்போது நடந்து முடிந்துள்ளது. 7 கட்டமாக தேர்தல் நடந்து, இன்று மாலையோடு வாக்குப்பதிவு முடிந்துள்ளது.

தேர்தல் முடிந்ததை அடுத்து வரிசையாக தேர்தலுக்கு பிந்தைய கருத்து கணிப்புகள் வெளியாகி வருகிறது. நாடு முழுக்க பாஜக கூட்டணி அதிக இடங்களை வெல்லும் என்று கருத்து கணிப்புகள் கூறுகிறது.

தமிழகத்தில் மொத்தம் 38 இடங்களில் தேர்தல் நடைபெற்றது. தமிழக தேர்தல் முடிவுகள் குறித்து இந்தியா டுடே -ஆக்சிஸ் போல் கருத்து கணிப்பு வெளியிட்டுள்ளது. இந்திய டுடே – ஆக்சிஸ் போல் கருத்து கணிப்பில் திமுக அணி 34 முதல் 38 இடங்களைக் கைப்பற்றும் என தெரிவித்துள்ளது.

அதிமுக கூட்டணி 0-4 இடங்களை பெறும் என்று கணித்து இருக்கிறது. மக்கள் நீதி மய்யம், அமமுக, நாம் தமிழர் கட்சிக்கு எந்த இடமும் கிடைக்காது என்று கணிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் என்டிடிவி, நியூஸ் 18 என பல்வேறு ஊடகங்கள் நடத்திய எக்ஸிட் போல் முடிவுகளிலும் தமிழகத்தில் திமுக – காங்கிரஸ் கூட்டணி மாபெரும் வெற்றி பெறும் என கூறப்பட்டுள்ளது.

spot_imgspot_imgspot_imgspot_img

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

spot_imgspot_imgspot_imgspot_img

More like this

பட்டுக்கோட்டை: மீண்டும் அண்ணாத்துரைக்கே வாய்ப்பு? – அரசியல் கள ஆய்வில் வெளிச்சம்.

தஞ்சாவூர் மாவட்டத்தின் முக்கிய அரசியல் கவனத்தை ஈர்த்துவரும் பட்டுக்கோட்டை சட்டமன்ற தொகுதியில் அடுத்த சட்டமன்றத் தேர்தலை முன்னிட்டு அரசியல் சூழல் சூடுபிடித்து வருகிறது....

பட்டுக்கோட்டை : அதிமுக கூட்டணியில் மீண்டும் NR போட்டி? – புது...

பட்டுக்கோட்டை சட்டமன்றத் தொகுதியில் வரும் தேர்தலை முன்னிட்டு அரசியல் சூழல் பரபரப்பாகி வருகிறது. குறிப்பாக திமுக கூட்டணியில் வேட்பாளர் தேர்வு குறித்து கட்சித்...

அதிராம்பட்டினத்தில் கேஸ் விநியோகத்தில் தாமதம் – செயற்கை தட்டுப்பாடு உருவாக்கப்படுகிறதா?

அதிராம்பட்டினம் மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் சமீப நாட்களாக சமையல் எரிவாயு (LPG) விநியோகத்தில் கடுமையான தாமதம் ஏற்பட்டுள்ளதாக பொதுமக்கள் குற்றம் சாட்டுகின்றனர். புக்கிங்...
spot_imgspot_imgspot_imgspot_img