Friday, March 13, 2026

தஞ்சை, திருவாரூர் உட்பட 5 மாவட்டங்களுக்கு ஆரஞ்ச் அலர்ட் – இந்திய வானிலை ஆய்வு மையம் !

spot_imgspot_imgspot_imgspot_img

தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை தீவிரமடைந்து வருகிறது. இதனால் கடந்த வெள்ளிக்கிழமை முதல் தமிழகத்தில் கனமழை பெய்து வருகிறது. நேற்று பெய்த கனமழையால் சென்னை உள்பட பல்வேறு பகுதிகளில் உள்ள சாலைகளில் தண்ணீர் தேங்கியுள்ளது.

இந்த நிலையில் சனிக்கிழமை மற்றும் ஞாயிற்றுக்கிழமை தமிழகம், புதுவை, காரைக்கால் ஆகிய பகுதிகளில் கனமழை பெய்யும் என இந்திய வானிலை மையம் தெரிவித்துள்ளது.

இதுகுறித்து இந்திய வானிலை மையம் தனது அறிக்கையில் கூறியிருப்பதாவது:

தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை தீவிரமடைந்துள்ளது. இதன் எதிரொலியாக நேற்று முதல் சென்னை உள்பட தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் கனமழை பெய்து வருகிறது.

இந்த நிலையில் சனிக்கிழமையும் ஞாயிற்றுக்கிழமையும் கனமழை பெய்யும். அடுத்த 3 நாட்களுக்கு தமிழகம் முழுவதும் கனமழை மற்றும் இடியுடன் கூடிய மழை பெய்யும். தமிழகம், புதுவை, காரைக்கால் பகுதிகளில் கனமழை முதல் மிக அதிக கனமழை வரை பெய்யும்.

இந்த மழை கிழக்கு திசை நோக்கி வீசும் காற்றால் ஏற்படுகிறது. தமிழகத்தின் நாகை, திருவாரூர், தஞ்சை, ராமநாதபுரம், திருநெல்வேலி ஆகிய மாவட்டங்களுக்கும் புதுவை, காரைக்கால் ஆகிய பகுதிகளுக்கும் ஆரஞ்ச் அலர்ட் விடுக்கப்பட்டுள்ளது. அது போல் காஞ்சிபுரம், தூத்துக்குடி ஆகிய மாவட்டங்களுக்கு மஞ்சள் அலர்ட் விடுக்கப்பட்டுள்ளது.

spot_imgspot_imgspot_imgspot_img

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

spot_imgspot_imgspot_imgspot_img

More like this

தேர்தல் 2026 : திமுக கூட்டணியில் முஸ்லீம் லீக், மமகவுக்கு 2...

தமிழ்நாடு சட்டசபை தேர்தல் ஏப்ரல் மாதத்தில் நடைபெற உள்ளது. இந்த தேர்தலில் தி.மு.க. தலைமையில் மெகா கூட்டணி அமைக்கப்பட்டு உள்ளது. இந்த கூட்டணியில்...

IUML தேசிய தலைவரை சந்தித்த அதிரை முஸ்லீம் லீக்கினர் – மாநாட்டிற்கு...

அதிராம்பட்டினம் நகர இந்திய யூனியன் முஸ்லிம் லீக் நகர நிர்வாகிகள், கட்சியின் தேசிய தலைவர் பேராசிரியர் தகைசால் தமிழர் கே.எம். காதர் முகைதீன்...

அதிரை ரயில் நிறுத்தம் தொடர்பாக போராட்டம்தான் தீர்வு என்றால் அதற்கும் தயார்- ...

அதிராம்பட்டினம் ரயில் நிறுத்தம் தொடர்பாக தேவைப்பட்டால் திமுக, காங்கிரஸ், முஸ்லீம் லீக் உள்ளிட்ட தோழமை கட்சிகளை ஒன்றிணைத்து ஒன்றிய ரயில்வே நிர்வாகத்தை கண்டிக்கும்...
spot_imgspot_imgspot_imgspot_img