Thursday, May 2, 2024

தஞ்சையில் முன்னாள் முதல்வர்கள் எம்.ஜி.ஆர், ஜெயலிலதா சிலைகளிடம் மனு கொடுக்கும் போராட்டம் !(படங்கள்)

Share post:

Date:

- Advertisement -

குடியுரிமை சட்டத்தை திரும்ப பெற கோரி மறைந்த முதல்வர்கள் ஜெயலலிதா, MGR சிலைகளிடம் மனு அளிக்கும் போராட்டம் இன்று தஞ்சையில் நடைபெற்றது.

குடியுரிமை திருத்த சட்டத்தை எதிர்த்து நாடெங்கிலும் போராட்டங்கள் வலுத்து வருகிறது. இதனிடையே கொரோனாவை காரணமாக வைத்து போராட்டத்தை நீர்த்து போக வைக்கும் வேளைகளில் அரசு ஈடுபட்டு வருகிறது.

இந்நிலையில் தஞ்சை கீழவாசலில் நடைபெற்று வரும் சாகீன்பாக் போராட்டத்திலிருந்து பேரணியாக தஞ்சை ரயில் நிலையம் அருகில் உள்ள முன்னாள் முதல்வர்கள் எம்ஜிஆர், ஜெயலலிதா ஆகியோரின் சிலைகளிடம், குடியுரிமை திருத்த சட்டத்தை திரும்ப பெறக்கோரி மனு அளிக்கப்பட்டது. ஆயிரக்கணக்கான மக்கள் ஒன்று திரண்டு பேரணியாக சென்றனர்.

முன்னதாக நம்மிடம் பேசிய லட்சுமி கூறுகையில், கொரோனாவை விட கோரமானவர்கள் மத்திய மாநில அரசுகட்டிலில் அமர்ந்து இருக்கிறார்கள் என்ற அவர், மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் பெயரை சொல்லி ஆட்சி செய்யும் எடப்பாடி அரசு அம்மாவின் கொள்கையை காற்றில் பறக்கவிட்டு காவி சிந்தனையாளர்களின் கனவை நனவாக்க துடிக்கிறார் என்றார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

spot_img

அதிகம் பகிரப்பட்டவை

spot_img

More like this
Related

ஒன்றரை மாதத்திற்கு பிறகு உரிய நபரை தேடி ஒப்படைக்கபட்ட தொகை., ஐமுமுகவினற்கு குவியும் பாராட்டு..!

தஞ்சை மாவட்டம் அதிராம்பட்டினம் காட்டுபள்ளிவாசல் தர்காவில் கடந்த மாதம் ஒரு வயதான...

அதிரையர்களுக்கு புதிய நம்பிக்கை கொடுத்த S.H.அஸ்லம்! திமுகவில் அதிகளவில் இணையும் இளைஞர்கள்!!

தஞ்சாவூர் மாவட்டம் அதிராம்பட்டினத்தை பொருத்தவரை அரசியல் அதிகாரம் என்பது பிராமணர்களை போல்...

மரண அறிவிப்பு : மீ.க. ஜெய்துன் அம்மாள் அவர்கள்..!!

நெசவு தெருவைச் சேர்ந்த மர்ஹூம் மீ.க. காதர் முகைதீன் அவர்களின் மகளும்,...

மரண அறிவிப்பு:- M.M.S சாகுல் ஹமீது அவர்கள்..!

மரண அறிவிப்பு:- மேலத்தெரு M.M.S. குடும்பத்தைச் சேர்ந்த அதிரை முன்னாள் பேரூராட்சி...