Saturday, December 13, 2025

தமிழகத்தில் மேலும் ஒருவருக்கு கொரோனா – உறுதி செய்தார் அமைச்சர் விஜயபாஸ்கர் !

spot_imgspot_imgspot_imgspot_img

தமிழகத்தில் 2-வதாக மேலும் ஒருநபருக்கு கொரோனா பாதிப்பு இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளதாக தமிழக சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் தெரிவித்துள்ளார்.

தமிழகத்தில் காஞ்சிபுரத்தைச் சேர்ந்த ஒருவருக்கு முதன் முதலாக கொரோனா பாதிப்பு இருப்பது உறுதி செய்யப்பட்டது. அவருக்கு தீவிர சிகிச்சைகள் அளிக்கப்பட்டு வீடு திரும்பியிருந்தார்.

இந்த நிலையில் தமிழகத்தில் 2-வதாக மேலும் ஒருவருக்கு கொரோனா பாதிப்பு இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளதாக அமைச்சர் விஜயபாஸ்கர் தெரிவித்துள்ளார். டெல்லியில் இருந்து சென்னை வந்த அந்த நபருக்கு கொரோனா இருப்பது உறுதி செய்யப்பட்டதால் சென்னை ராஜீவ் காந்தி மருத்துவமனையில் அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

இதனிடையே சென்னையில் செய்தியாளர்களிடம் பேசிய அமைச்சர் விஜயபாஸ்கர், கொரோனா தாக்குதலைத் தவிர்க்க பயணங்களைத் தவிர்க்க வேண்டும். தமிழகத்தில் முதன் முதலில் கொரோனா பாதிப்பு என்பது மஸ்கட்டில் இருந்து வந்தவருக்கு இருந்தது உறுதி செய்யப்பட்டது.

2-வது நபரும் வடமாநிலத்தைச் சேர்ந்தவர். டெல்லியில் இருந்து வந்த 20 வயது இளைஞருக்கு கொரோனா பாதிப்பு இருப்பது உறுதி செய்யப்பட்டு அவருக்கு தனிவார்டில் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது என்றார். மேலும் கொரோனா பாதித்த இளைஞர் யார் யாருடன் தொடர்பில் இருந்தார் ? அவரது உறவினர்கள் குறித்த விவரம் சேகரிக்கப்பட்டு அவர்கள் கண்காணிப்புக்குள்ளாக்கப்படுவர் என்றும் விஜயபாஸ்கர் தெரிவித்தார்.

spot_imgspot_imgspot_imgspot_img

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

spot_imgspot_imgspot_imgspot_img

More like this

அதிராம்பட்டினத்தில் ரயில்கள் நின்று செல்ல வேண்டும் – ச.முரசொலி MP கோரிக்கை.!

தஞ்சாவூர் நாடாளுமன்ற உறுப்பினர் ச.முரசொலி அவர்கள், அதிராம்பட்டினம் மற்றும் பேராவூரணி ஆகிய முக்கிய ரயில் நிலையங்களில், தாம்பரம் - செங்கோட்டை மற்றும் தாம்பரம்...

Indigo விமானத்தின் தரமற்ற சேவை : குமுறும் அதிரை பயணிகள்..!!

இந்தியாவின் முன்னணி குறைந்த கட்டண விமான சேவைகளில் பெரிதும் பெயர் போன Air India பயணிகளில் அதிருப்திக்கும் அவ்வப்போது அசம்பாவிதங்களுக்குள்ளும் சிக்கிக் கொள்வது...

பேராசிரியர் காதர் மொய்தீனுக்கு தமிழ்நாடு அரசின் ‘தகைசால் தமிழர்’ விருது அறிவிப்பு!

இந்திய யூனியன் முஸ்லிம் லீக் தேசிய தலைவர் கே.எம்.காதர் மொய்தீனுக்கு தகைசால் தமிழர் விருதை தமிழக அரசு அறிவித்துள்ளது. அவருக்கு ரூபாய் 10...
spot_imgspot_imgspot_imgspot_img