Thursday, March 19, 2026

அதிரையில் PFI சார்பில் ரமலானை வரவேற்போம் மற்றும் ஆம்புலன்ஸ் அர்ப்பணிப்பு நிகழ்ச்சி!(படங்கள்)

spot_imgspot_imgspot_imgspot_img

பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியாவின் தஞ்சை தெற்கு மாவட்டத்தின் சார்பாக அதிராம்பட்டினம் நகரில் ஆம்புலன்ஸ் அர்ப்பணிப்பு நிகழ்ச்சி நேற்று 10.4.2021 மாலை 5:30 மணி அளவில் அதிராம்பட்டினத்தில் உள்ள கதிஜா மஹால் நடைபெற்றது. இந்நிகழ்ச்சிக்கு பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியாவின் அதிரை நகர தலைவர் ஜாவித் தலைமை தாங்கினார்.

சிறப்பு அழைப்பாளராக எஸ்டிபிஐ கட்சியின் மாநில பொதுச்செயலாளர் அச.உமர் பாரூக், மாநில செயலாளர் A.அபூபக்கர் சித்திக் மற்றும் பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியாவின் தஞ்சை தெற்கு மற்றும் திருவாரூர் மாவட்ட தலைவர் A.ஹாஜா அலாவுதீன் ஆகியோர் கலந்து கொண்டு வாழ்த்துரை வழங்கினர். பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியாவின் மாநில தலைவர் M.முகம்மது சேக் அன்சாரி ஆம்புலன்சை மக்களின் சேவைக்காக பொதுமக்கள் முன்னிலையில் அர்ப்பணித்தார்.

இதில் எஸ்டிபிஐ கட்சியின் திருவாரூர் மாவட்ட தலைவர் A.தப்ரே ஆலம் பாதுஷா, தஞ்சை தெற்கு மாவட்ட பொது செயலாளர் முகம்மது அஸ்கர், எஸ்டிபிஐ கட்சியின் மாநில செயலாளர் வழக்கறிஞர் சஃபியா, பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியாவின் மாவட்ட செயலாளர் Er.N.மர்சூக் அஹமது பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியாவின் மண்டல செயற்குழு உறுப்பினர் வழக்கறிஞர் Z.முகமது தம்பி ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

இறுதியாக பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியாவின் நகர செயலாளர் சம்சுதீன் நன்றி உரையாற்றினார். இதில் பொதுமக்கள் மற்றும் ஜமாத்தார்கள் கலந்து கொண்டனர் சிறப்பித்தனர்.

spot_imgspot_imgspot_imgspot_img

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

spot_imgspot_imgspot_imgspot_img

More like this

அதிரை நகராட்சியின் “உப்பி போன” விளையாட்டுத் திட்டம்!

தஞ்சாவூர் மாவட்டம் அதிராம்பட்டினம் நகராட்சியில், கடந்த சில தினங்களுக்கு முன்பு இளைஞர்களுக்காக வழங்கப்பட்ட விளையாட்டு உபகரணங்கள் முறையான பராமரிப்பின்றி வீணான சம்பவம் பெரும்...

பட்டுக்கோட்டை : அதிமுக கூட்டணியில் மீண்டும் NR போட்டி? – புது...

பட்டுக்கோட்டை சட்டமன்றத் தொகுதியில் வரும் தேர்தலை முன்னிட்டு அரசியல் சூழல் பரபரப்பாகி வருகிறது. குறிப்பாக திமுக கூட்டணியில் வேட்பாளர் தேர்வு குறித்து கட்சித்...

அதிராம்பட்டினம் பேருந்து நிலையத்தில் மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணி சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம்.

அதிராம்பட்டினம் திமுக மேற்கு கழகம் முன்னிலையில், மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணி கட்சிகள் சார்பில் மத்திய அரசின் மக்கள் விரோத கொள்கைகளை கண்டித்து கண்டன...
spot_imgspot_imgspot_imgspot_img