Sunday, February 1, 2026

அதிரை மீன் மார்க்கெட்டில் கட்டுக்கடங்காத கூட்டம் – களையெடுத்த கலெக்டர்!

spot_imgspot_imgspot_imgspot_img

அதிராம்பட்டிணம் தக்வா மீன் மார்கெட்டில் கொரோனா விதிமுறைகளை மீறி கூட்டம் கூடுவதாக தொடர்ந்து புகார் எழுந்தது. இதனையடுத்து அதிராம்படினம் பேரூராட்சி செயல் அலுவலர் பழனிவேல் தலைமையில், காவல் ஆய்வாளர் ஜெயமோகன் உள்ளிட்ட அதிகாரிகள் நேற்று ஆய்வு மேற்கொண்டனர். அப்போது அங்கு கொரோனா விதிமுறைகள் மீறப்படுவது குறித்து மாவட்ட நிர்வாகத்திற்கு தகவல் அனுப்பி உள்ளனர்.

தகவலை அடுத்து பட்டுக்கோட்டை துணையாட்சியர் பாலச்சந்திரன் இன்று நேரில் அதிரடி ஆய்வு மேற்கொண்டார். அப்போது மார்கெட்டில் கொரோனா விதிமுறைகள் மீறப்படுவதை உறுதி செய்து நாளை முதல் மறு உத்தரவு வரும் வரை தக்வா மீன் மார்கெட்டை மூட உத்தரவு பிறப்பித்தார்.

முன்னதாக தக்வா பள்ளி ட்ரஸ்ட் சார்பில் மீன் மார்கெட் வியாபாரிகளிடம் முறையாக கொரோனா விதிமுறைகளை கடைபிடிக்க அறிவுறுத்தல் செய்தபிறகும் கூட அதனை வியாபாரிகளும், வாடிக்கையாளர்களும் கடைப்பிடிக்கவில்லை. இதனாலேயே இந்த மீன் மார்கெட் மூடப்படுவதாக நிர்வாகம் தெரிவித்துள்ளது.

தக்வா மீன் மார்க்கெட் மூடப்படும் என்ற அறிவிப்பினால் காய்கனி, இறைச்சிகூடங்களும் பாதிக்கப்படுவதாக அவ்விரு வியாபாரிகளும் கவலை தெரிவித்துள்ளனர்.

spot_imgspot_imgspot_imgspot_img

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

spot_imgspot_imgspot_imgspot_img

More like this

கல்வித்தந்தை மறைவு முதலமைச்சர், முஸ்லீம் லீக் பொதுச்செயலாளர் இரங்கல்.

அதிராம்பட்டினம் இமாம் ஷாஃபி கல்வி அறக்கட்டளையின் நிறுவனர் மற்றும் சீபோல் நிறுவனத்தின் தலைவருமான சிறந்த தொழிலதிபர் எம்.எஸ். தாஜூதீன் அவர்கள் வயது மூப்பின்...

பலநாள் கனவு நிறைவேறியது – உற்சாக வெள்ளத்தில் அதிரையர்கள்!

அதிராம்பட்டினம் வழியாக செல்லும் தாம்பரம் - செங்கோட்டை அதிவிரைவு ரயில் மற்றும் தாம்பரம் - ராமேஸ்வரம் பாம்பன் விரைவு ரயில் ஆகியவற்றுக்கு அதிராம்பட்டினத்தில்...

IUML தேசிய தலைவரை சந்தித்த அதிரை முஸ்லீம் லீக்கினர் – மாநாட்டிற்கு...

அதிராம்பட்டினம் நகர இந்திய யூனியன் முஸ்லிம் லீக் நகர நிர்வாகிகள், கட்சியின் தேசிய தலைவர் பேராசிரியர் தகைசால் தமிழர் கே.எம். காதர் முகைதீன்...
spot_imgspot_imgspot_imgspot_img