Friday, December 19, 2025

பெண்ணிடம் அநாகரிமாக நடந்துக்கொண்ட திமுக கவுன்சிலர்கள்! அதிரை தில்நவாஸ் பேகத்திற்கு நியாயம் வழங்குவாரா மு.க.ஸ்டாலின்?

spot_imgspot_imgspot_imgspot_img

அதிரை நகராட்சி மன்ற துணை தலைவர் பதவியை கூட்டணி தர்மத்தின் அடிப்படையில் இந்திய கம்யூனிஸ்டு கட்சிக்கு திமுக தலைமை ஒதுக்கியது. ஆனால் கடந்த 4ம் தேதி நடந்த துணை தலைவருக்கான மறைமுக தேர்தலில் திடீரென போட்டியிட்ட திமுக அதிருப்தி நகர செயலாளர் இராம.குணசேகரன், 20 வாக்குகளை பெற்று கூட்டணி தர்மத்தை மீறி வெற்றிபெற்றார். இதனிடையே தி.மு.க தலைவர் மு.க.ஸ்டாலினின் அறிக்கையை தொடர்ந்து கூட்டணி தர்மத்தை மீறிப்பெற்ற பதவியை இராம.குணசேகரன் ராஜினாமா செய்வார் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில், அதனை அவர் செய்யவில்லை.

இந்நிலையில் இந்திய கம்யூனிஸ்டு கட்சியின் 19வது வார்டு உறுப்பினரும் கோட்டூரார் ஹாஜா மைதீனின் மனைவியுமான தில்நவாஸ் பேகம் வெளியிட்டிருக்கும் ஆடியோ சமூக வலைதளங்களில் வைரலாகியுள்ளது. அந்த ஆடியோவில் “துணை தலைவர் தேர்தலில் போட்டியிட கூடிய தன்னை முன்மொழிய கூட திமுக அதிருப்தி கவுன்சிலர்கள் தயாராக இல்லை.

எனது வேட்பு மனுவை பூர்த்தி செய்ய நகராட்சி ஊழியர்களை உதவி செய்யவிடாமல் தடுத்தனர். வெளியில் காத்திருக்கும் எனது கணவரையும்  சந்திக்க கூடாது என திமுக அதிருப்தி கவுன்சிலர்கள் கூறினர். இருப்பினும் எனது கணவரை வெளியில் சென்று சந்திக்க நகராட்சி ஆணையர் அனுமதித்தார். இதேபோல் திமுக அதிருப்தி கவுன்சிலர்களின் வீட்டு பெண்களுக்கு நடந்திருந்தால் என்ன செய்வார்கள்?. ஒரு பெண் என்றும் பாராமல் என்னிடம் திமுக அதிருப்தி கவுன்சிலர்கள் நடந்துக்கொண்ட விதம் மன உளைச்சலை ஏற்படுத்தியுள்ளது. இந்த காயத்திற்கு மருந்து துணை தலைவர் பதவியை தனக்கு தருவது தான் ” இவ்வாறு அவர் கேள்வி எழுப்பியுள்ளார்.

அதிரை தில்நவாஸ் பேகத்திற்கு திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் நியாயம் வழங்குவாரா? பொறுத்திருந்து பார்ப்போம்.

spot_imgspot_imgspot_imgspot_img

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

spot_imgspot_imgspot_imgspot_img

More like this

அதிராம்பட்டினம் தாலுகா எப்போது? தேர்தலுக்குள் அறிவிப்பு வெளியிட வேண்டும் என இந்திய...

அதிராம்பட்டினம் சுற்றுவட்டாரத்தை உள்ளடக்கிய தாலுகா உருவாக்க நடவடிக்கைகளை மாவட்ட நிர்வாகம் வேகமாக முன்னெடுத்து கிட்டத்தட்ட பணிகள் முடிவடைந்து தஞ்சை ஆட்சியர் அலுவலகத்தில் கிடப்பில்...

அதிராம்பட்டினம் ரயில் நிலையத்தில் இருந்து, ஐயப்ப பக்தர்கள் சபரிமலை பயணம்!.

அதிராம்பட்டினம், டிசம்பர் 16: ரயில் நிலையத்தில் இருந்து ஏராளமான ஐயப்பா பக்தர்கள் சபரிமலை புனித பயணத்தைத் தொடங்கினர்.  வருடந்தோறும் சபரிமலை ஐயப்பன் கோவிலைத்...

பட்டுக்கோட்டை தொகுதியில் பாஜக இல்லை- தமாகா. கோரிக்கை, அ.தி.மு.க. குழப்பம், தி.மு.க....

-அமீரகத்திலிருந்து அப்துல்காதர்- பட்டுக்கோட்டை தொகுதியில் மீண்டும் களம் இறங்கும் த.மா.கா.: அ.தி.மு.க. குழப்பம், தி.மு.க. தனித்த போட்டி?மீண்டும் பட்டுக்கோட்டை தொகுதியில் களம் இறங்கத் தயாராக...
spot_imgspot_imgspot_imgspot_img