Home » ஜமால் உஸ்மானி கைது! இஸ்லாமியர் விவகாரத்தில் இரட்டை வேடம் போடும் தமிழக அரசு! அதிரை ஹாஜா அலாவுதீன் கண்டனம்!!

ஜமால் உஸ்மானி கைது! இஸ்லாமியர் விவகாரத்தில் இரட்டை வேடம் போடும் தமிழக அரசு! அதிரை ஹாஜா அலாவுதீன் கண்டனம்!!

0 comment

பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியா அமைப்பின் தஞ்சை தெற்கு மாவட்ட தலைவர் அதிரை ஹாஜா அலாவுதீன் வெளியிட்டிருக்கும் அறிக்கையில் “தொடர்ந்து நீதிமன்றம், காவல்துறை, பிற மதங்கள் மற்றும் பிற அரசியல் தலைவர்களை வன்மமான பேச்சுக்களை கொண்டும், அசிங்கமான வார்த்தைகளை கொண்டு பேசியும் இரு மதத்திற்கு இடையே வன்முறையை தூண்டும் விதமாகவும் மேலும் பத்திரிக்கையாளர்களை அசிங்கமாகவும் தரக்குறைவாகவும் பேசிவரும் எச் ராஜா, எஸ் வி சேகர் போன்ற உயர்சாதி சங்பரிவார கூட்டங்களின் மீது பல்வேறு வழக்குகள் பதியப்பட்ட போதும் அதன் மீது எந்த நடவடிக்கைகளும் எடுக்காமல் மென்மையாக கடந்து போவதும்

அதே நேரத்தில் சாமானிய சிறுபான்மை மக்கள் அல்லது உரிமைக்காக போராடக்கூடிய சாமானிய மக்கள் (தற்போது தஞ்சாவூர் மாவட்டம் அதிரையில் பேசியதற்காக ஜமால் உஸ்மானி) ஆகியோர் மீது பதியப்படும் வழக்குகளில் மட்டும் ஒரு சில மணி நேரங்களில் உங்களால் நடவடிக்கை எடுக்கவும் தனிப்படை அமைத்து தேடவும் முடிகிறது என்றால் இது எவ்வளவு மோசமான ஒரு சூழல்?

சட்டத்தை நடைமுறைப்படுத்துவதில் காட்டுகின்ற பாரபட்சமும் பாசிசத்தின் ஒரு முகமே! இதை வன்மையாக கண்டிக்கின்றோம்

நேற்று அதிராம்பட்டிணத்தில் ஹிஜாபிற்கு எதிராக கர்நாடக உயர் நீதிமன்றத்தின் தீர்ப்பை எதிர்த்து தவ்ஹீத் ஜமாத் சார்பாக நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தின்போது மத நல்லிணக்கத்திற்கு உதாரணமாக நடந்து கொண்ட அந்த ஆர்ப்பாட்டத்தை மத மோதலை உருவாக்கும் விதமாக நடைபெற்ற ஆர்ப்பாட்டமாக சித்தரித்து சாதாரண அரசியல் விமர்சனங்களுக்கு கூட மத மோதல்களை உருவாக்கும் விதமான பேச்சுக்களுக்கு போடப்படும் 153a போன்ற பிணையில் வெளிவர இயலாத பிரிவுகளின் கீழ் வழக்குப் பதிவு செய்து இருப்பது என்பதை வன்மையாக கண்டிக்கிறேன்” இவ்வாறு அதில் குறிப்பிட்டுள்ளார்.

You may also like

Leave a Comment

About Us

 உங்களுடைய தகவல்களை எங்களுக்கு உடன் அனுப்பி வைக்க தொடர்பு கொள்ளுங்கள்..

Feature Posts

Newsletter