Tuesday, March 24, 2026

வாசனை_கவியன்பன்கலாம்

spot_imgspot_imgspot_imgspot_img

காற்றில் மிதந்து வந்து
நாசியில் நுழைந்து
மூளைக்குத் தரும் பரிசு

தேனீயின் சுறுசுறுப்பைத்
தேடிவந்து தென்றல் வழியாக
உணர்வுக்குத் தரும் உணவு

கனவுகளை உருவாக்கும்
கற்பனைச் சிறகுகளை விரிக்கும்
எண்ணங்களுக்குத் தரும் வித்து

சுற்றியுள்ளோர் உன்மீது
பற்றுக் கொள்ள வைக்க
தொற்றிக் கொள்ளும் தோழமை

உணர்ச்சிகளை மென்மையாக்கி
ஆன்மாக்களின் அரவணைப்பை
ஆரத்தழுவச் சொல்லும் ஈர்ப்பு

கைகளால் கசக்கினாலும்
கடைசி வரைக்கும் நறுமணம்
களையாதிருக்கும் தியாகம்

பூக்கள் ஈன்றெடுத்ததால்
பூமியை முத்தமிட்ட மழையால்
புல்லின் மீது பட்ட பனித்துளியால்

ஆக்கம்:

கவியன்பன் கலாம்

spot_imgspot_imgspot_imgspot_img
spot_imgspot_imgspot_imgspot_img

More like this

நியூசிலாந்து வாழ்அதிரையர்களின் நோன்பு பெருநாள் கொண்டாட்டம்!

அதிரை நகராட்சியின் “உப்பி போன” விளையாட்டுத் திட்டம்!

தஞ்சாவூர் மாவட்டம் அதிராம்பட்டினம் நகராட்சியில், கடந்த சில தினங்களுக்கு முன்பு இளைஞர்களுக்காக வழங்கப்பட்ட விளையாட்டு உபகரணங்கள் முறையான பராமரிப்பின்றி வீணான சம்பவம் பெரும்...

பட்டுக்கோட்டை : அதிமுக கூட்டணியில் மீண்டும் NR போட்டி? – புது...

பட்டுக்கோட்டை சட்டமன்றத் தொகுதியில் வரும் தேர்தலை முன்னிட்டு அரசியல் சூழல் பரபரப்பாகி வருகிறது. குறிப்பாக திமுக கூட்டணியில் வேட்பாளர் தேர்வு குறித்து கட்சித்...
spot_imgspot_imgspot_imgspot_img