Home » அதிரையில் ஓர் அதிசயம் !

அதிரையில் ஓர் அதிசயம் !

0 comment

இறைவனின் பேரருளால் அதிரை ஷிஃபா மருத்துவமனையில் கடந்த ஆண்டு துவக்கப்பட்ட “ ஷிஃபா பாராமெடிகல் காலேஜ்” ( ஷிஃபா துணைமருத்துவக் கல்லூரி)யின் இரண்டாம் ஆண்டு துவக்க விழா 09/08/2023 அன்று மாலை 4:30 மணி முதல் 6:30 மணி வரை மிகச் சிறப்பாக நடைபெற்றது. 2023-2024 ஆண்டிற்கான முதல் பிரிவு மாணவிகள் சேர்க்கையுடன் வகுப்புகள் துவக்கமும் நடைபெற்றது. இந்த விழா “ பெண்களுக்குப் பெண்களாலேயே நடத்தப்பட்ட விழா” என்பதே அதிரையின் தற்போதைய அதிசயம்!

விழா தலைமை: மருத்துவர். திருமதி.எஸ். கீதா சரவணன் எம்.பி.பி.எஸ். டி.ஜி.ஓ
விழா ஒருங்கிணைப்பாளர் மற்றும் ஆலோசகர்: மருத்துவர் திருமதி. அ. சரபுன்னிசா . எம்.பி.பி.எஸ்
சிறப்பு விருந்தினர் & பேச்சாளர்: திருமதி அ. மீனாகுமாரி எம்.ஏ.எம்.ஏ .பி.எட் (முதல்வர், இமாம் ஷாஃபி (ரஹ்)மெட்ரிகுலேஷன் ஹையர் செகண்டரி ஸ்கூல், அதிராம்பட்டினம்)
கிரா அத்: திருமதி. தவ்ஹீதா (முதலாம் ஆண்டு மாணவி)
இவ்விழாவில் இரண்டாம் ஆண்டுக்குத் தேர்வாகியுள்ள மாணவிகள் அனைவரும் “இந்தக் கல்லூரியில் *மருத்துவம் சார்ந்த படிப்புப் படித்த பின் தங்களுக்கு தற்பொழுது ஏற்பட்டுள்ள முக்கிய மாற்றங்களான தன்னம்பிக்கை ,துணிவு, குடும்ப நலன் பேணுதலில் அக்கறை போன்றவற்றைக் குறித்து” அனைவரிடமும் பெருமிதத்துடன் எடுத்துரைத்தனர். இதன்மூலம் இந்த மருத்துவப் படிப்பு எல்லோருக்கும் அவசியம் என வலியுறுத்தி கூறினர்.
இவ்விழாவில் மாணவிகளின் அன்னையர்களும், பெண் உறவினர்களும் வந்து செவியுற்றதுடன், அவர்கள் செய்திருந்த அறிவியல் ஓவியங்களைக் கண்ணுற்றும் வியந்து வெகுவாகப் பாராட்டியும், பிரார்த்தனை செய்தும் நிர்வாகத்திற்கு நன்றி தெரிவித்தனர்.
மேலும் சென்ற ஆண்டு சிறந்த முறையில் பயிற்றுவித்த ஆசிரியர்கள்
1) மருத்துவர். திருமதி எஸ். கீதா சரவணன் எம்.பி.பி.எஸ்.,டி.ஜி.ஒ
2) மருத்துவர். திருமதி அ. சரபுன்னிசா .எம்.பி.பி.எஸ்
3) திரு.எஸ்.ஏ. கலாம். பி.காம்.
4) திருமதி. ஃபாத்திமா ஃபஹ்மிதா. எம்.எஸ்சி
5) திருமதி . ஆயிஷா ஜஹிரா பி.எஸ்சி
6) திருமதி . மாஜிதா நிலோஃபர் பி.எஸ்சி
ஆகியோர்க்குப் பெற்றோர்களும், நிர்வாகத்தினரும் நன்றி தெரிவித்துக் கொண்டனர். கடந்த முதலாம் ஆண்டில் (2022-2023 ) சிறப்பாக ஆங்கிலப் பாடம் நடத்திய ஆசிரியர் திரு. எஸ்.ஏ. கலாம் பி.காம் அவர்களுக்கு இரண்டாம் ஆண்டு மாணவிகள் நினைவுப் பரிசளித்துக் கௌரவித்தனர்.
சிற்றுண்டி மற்றும் துஆ பிரார்த்தனையுடன் விழா இனிதே நிறைவு பெற்றது.

You may also like

Leave a Comment

About Us

 உங்களுடைய தகவல்களை எங்களுக்கு உடன் அனுப்பி வைக்க தொடர்பு கொள்ளுங்கள்..

Feature Posts

Newsletter