Home » அரஃபாத்!

அரஃபாத்!

0 comment

வெள்ளுடையில் பாவக்கறை
வெளுக்கும் வண்ணான் துறை

ஆதி பிதாவும் அன்னையும்
சந்தித்த “அருள்மலை”த் திடல்
ஆகிரத்தின் “மஹ்ஷரை” நினைவூட்டும் மக்கள் கடல்!

ஒருநிமிடமேனும் தரிபட
நிறைவேறும்
ஹஜ் எனும் பேறு
கருவிலிருந்து பாவக்
கறையின்றி வெளியாகும் சிசு போன்று !

கனவினை மெய்ப்டுத்த
“கலீலுல்லாஹ்”அறிந்த இடம்
“காத்தமுன் நபி” இறுதிப் பேருரையின்
கட்டியம் கூறும் தடம்!

பாலுக்கு அழும்
பச்சிளம் பிள்ளை போல்
பாவமன்னிப்பால் “ஈமானின்”
பசிக்கு அழும் நாள்!

நிறைவான மனத்தினில்
நிம்மதி “ஆக்ஸிஜனாம்”
இறையின் காதலுக்குள்
இணையும் ஆன்மாவாம்!

கண்ணீர்க் கடலாகும்
பாலையின் பெருவெளி
எண்ணங்கள் தெளிவாக்கும்
ஏற்றிடும் “கல்பின்” பேரோளி!

ஆக்கம்;
கவியன்பன் கலாம், அதிராம்பட்டினம்.

குறிப்பு:

“அருள்மலை”= ஜபலர்ரஹமத்

“மஹ்ஷர்” = மறுமையில் விசாரணைத் திடல்

” கலீலுல்லாஹ்”= இறைவனின் நண்பர்

“காத்தமுன் நபி”= இறுதி நபி

“கல்பு”= உள்ளம்

You may also like

About Us

 உங்களுடைய தகவல்களை எங்களுக்கு உடன் அனுப்பி வைக்க தொடர்பு கொள்ளுங்கள்..

Feature Posts

Newsletter