Tuesday, February 3, 2026

ஃபேஸ்புக், ட்விட்டர் மூலம் சிலிண்டர் முன்பதிவு செய்யும் வசதி அறிமுகம்

spot_imgspot_imgspot_imgspot_img

ஃபேஸ்புக், ட்விட்டர் மூலம் சமையல் எரிவாயு சிலிண்டருக்கான முன்பதிவு செய்யும் வசதி அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.
பொதுத்துறை எண்ணெய் நிறுவனங்களான இந்தியன் ஆயில், பாரத் பெட்ரோலியம் உள்ளிட்ட நிறுவனங்கள், வீடுகள் மற்றும் கடைகளுக்குத் தேவையான எரிவாயு சிலிண்டர்களை விநியோகம் செய்து வருகின்றன. இந்த சிலிண்டர்களை பெற, எண்ணெய் நிறுவனங்களின் கட்டணமில்லா தொலைபேசி எண்கள் மற்றும் இணையதளம் வாயிலாக முன்பதிவு செய்தால் மட்டுமே பெற முடியும் என்கிற நிலைமை இதுவரை இருந்து வந்தது.
இந்நிலையில், ஃபேஸ்புக், ட்விட்டர் மூலம் சமையல் எரிவாயு சிலிண்டருக்கான முன்பதிவு செய்யும் வசதி அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. முதற்கட்டமாக வட இந்தியாவில் தொடங்கப்பட்டுள்ள இந்த சேவை விரைவில் தமிழகத்தில் அறிமுகப்படுத்தப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்தியன் ஆயில், இந்துஸ்தான் பெட்ரோலியம் காப்பரேஷன் மற்றும் பாரத் பெட்ரோலியம் ஆகிய நிறுவனங்கள் இந்த முன்பதிவு வசதியை அறிமுகப்படுத்தியுள்ளதாக இந்தியன் ஆயில் நிறுவன

அதிகாரி ஒருவர் குறிப்பிட்டுள்ளார்.

spot_imgspot_imgspot_imgspot_img

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

spot_imgspot_imgspot_imgspot_img

More like this

மகளிர் உரிமைத்தொகை கிடைக்கப் பெறாதவர்கள் விண்னப்பிக்க வாய்ப்பு!

அதிராம்பட்டினத்தில் மகளிர் இரண்டாம் கட்டமாக உரிமைத்தொகை விண்ணப்பித்தவர்களுக்கு உதவித்தொகை வழங்கும் திட்டம் தொடங்கப்பட்ட நிலையில் விடுவிக்கப்பட்ட நபர்கள் விண்ணப்செய்யலாம் என தமிழக அரசு...

அதிரை சாலைகளில் மாடுகளால் ஏற்படும் விபத்துகள்: நகராட்சி மாடு பிடி நடவடிக்கை...

அதிராம்பட்டினம் சாலைகளில் சுற்றித்திரியும் மாடுகளால்  விபத்துகள் அதிகரித்துள்ளன. கூட்டமாக அமர்ந்து வாகனங்கள் நிலைதடுமாற்றம் ஏற்படுத்துவதாக நகராட்சி கூறுகிறது. இந்த விபத்துக்களுக்கு காரணம் மாடு வளர்ப்பவர்கள்...

பட்டுக்கோட்டை – அதிராம்பட்டினம் இடையே இரவு நேர சிறப்பு பேருந்து..!!

தினசரி  மாலை 6:10 மணியளவில் சென்னை தாம்பரத்திலிருந்து புறப்பட்டு நள்ளிரவு 1:08 மணிக்கு பட்டுக்கோட்டை வழியாக ராமேஸ்வரம் செல்கிறது. அதிராம்பட்டினம் நகராட்சி மற்றும் அதன்...
spot_imgspot_imgspot_imgspot_img