Wednesday, March 18, 2026

அதிரையில் 3வயது சிறுவனை கடித்த வெறிநாய் கூட்டம்.., மெத்தன போக்கில் அதிரை நகராட்சி…?

spot_imgspot_imgspot_imgspot_img

.தஞ்சை மாவட்டம் அதிராம்பட்டினம் பகுதியில் வெறி நாய்கள் அதிகம் உலா வருகின்றன. இதுகுறித்து பொதுமக்கள் மற்றும் சமூக ஆர்வலர்கள் தொடர்ச்சியாக பல்வேறு கட்ட கோரிக்கைகளை முன்வைததும் அனைவரும் அறிந்ததே.

இந்நிலையில், இன்றைய தினம் அதிரை ஷிஃபா மருத்துவமனை அருகாமையில் சதாம் நகர் பகுதியில் ஆதில் என்ற மூன்றரை வயது பச்சிளம் சிறுவனை வெறி நாய்கள் சூழ்ந்து கடித்துள்ளது.

சிறுவனின் அலறல் சப்தம் கேட்டு ஓடிவந்த சிறுவனின் பெற்றோர் அந்த வெறிநாய் கூட்டத்திடமிருந்து குழந்தையை மீட்டு அதிரை அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அழைத்து சென்றனர். இந்நிலையில் அதிரை அரசு மருத்துவமனையில் போதிய மருத்துவ வசதி இல்லாத காரணத்தால் பட்டுக்கோட்டை அரசு மருத்துவமனைக்கு மேல் சிகிச்சைக்காக கொண்டு சென்றுள்ளனர்.

இச்சம்பவம் குறித்து சதாம் நகர்(மழவேனிற்காடு ஊராட்சி) அருகே உள்ள அதிரை பகுதி பொதுமக்கள் சிலர் கூறுகையில், அதிராம்பட்டினத்திலும் இதேபோன்று சம்பவங்கள் நடைபெறுவதாகவும், பொதுமக்களின் கோரிக்கைகள் நிறைவேற்ற முடியாமல் பல்வேறு விஷயங்களில் மெத்தனபோக்கில் அதிரை நகராட்சி நிர்வாகம் செயல்பட்டு வருகிறது என்றும் குறிப்பிட்டிருந்தார். இன்னிலையில் சதாம் நகர் போன்ற சில பகுதிகளை அதிரை நகராட்சியுடன் இணைக்க முயற்சித்து வருகிறது குறிப்பிடுகின்றனர்.

spot_imgspot_imgspot_imgspot_img
spot_imgspot_imgspot_imgspot_img

More like this

அதிரை நகராட்சியின் “உப்பி போன” விளையாட்டுத் திட்டம்!

தஞ்சாவூர் மாவட்டம் அதிராம்பட்டினம் நகராட்சியில், கடந்த சில தினங்களுக்கு முன்பு இளைஞர்களுக்காக வழங்கப்பட்ட விளையாட்டு உபகரணங்கள் முறையான பராமரிப்பின்றி வீணான சம்பவம் பெரும்...

பட்டுக்கோட்டை : அதிமுக கூட்டணியில் மீண்டும் NR போட்டி? – புது...

பட்டுக்கோட்டை சட்டமன்றத் தொகுதியில் வரும் தேர்தலை முன்னிட்டு அரசியல் சூழல் பரபரப்பாகி வருகிறது. குறிப்பாக திமுக கூட்டணியில் வேட்பாளர் தேர்வு குறித்து கட்சித்...

அதிராம்பட்டினம் பேருந்து நிலையத்தில் மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணி சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம்.

அதிராம்பட்டினம் திமுக மேற்கு கழகம் முன்னிலையில், மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணி கட்சிகள் சார்பில் மத்திய அரசின் மக்கள் விரோத கொள்கைகளை கண்டித்து கண்டன...
spot_imgspot_imgspot_imgspot_img