Saturday, March 14, 2026

அதிரையில் விஏஓ அலுவலகம் அமைக்க வேண்டும்! எஸ்.எச்.அஸ்லம் கோரிக்கை!!

spot_imgspot_imgspot_imgspot_img

தஞ்சாவூர் மாவட்டம் அதிராம்பட்டினத்தில் கிராம நிர்வாக அலுவலர் அலுவலகத்தை அமைக்க கோரி பட்டுக்கோட்டை தாசில்தாரிடம் மனு அளித்தனர்.

தஞ்சாவூர் மாவட்டம் பட்டுக்கோட்டை வட்டம் அதிராம்பட்டினம் வருவாய் கிராமம் என்பது வருவாய் சரகத்தின் தலைமையிடமாகவும் நகராட்சியாகவும் திகழ்கிறது. அதேசமயம் அதிராம்பட்டினம் வருவாய் கிராமத்தின் நிர்வாக அலுவலரின் அலுவலகம் மழவேனிற்காடு ஊராட்சியில் அமைக்கப்பட்டுள்ளது. இதனால் அத்தியாவசிய தேவைகளுக்காக அதிராம்பட்டினம் மக்கள் வெகுதூரத்தில் உள்ள மழவேனிற்காட்டிற்கு செல்ல வேண்டிய சூழல் நிலவுகிறது. சுமார் 3கி.மீ. தொலைவில் உள்ள அந்த அலுவலகத்திற்கு செல்ல போதிய பொது போக்குவரத்து வசதியும் இல்லை.

இந்நிலையில் மக்கள் தொகை அதிகம் இருக்க கூடிய அதிராம்பட்டினம் நகராட்சி எல்லைக்குட்பட்ட பகுதியில் கிராம நிர்வாக அலுவலகத்தை அமைக்க கோரி பட்டுக்கோட்டை தாசில்தார் சுகுமாரிடம் முன்னாள் சேர்மனும் மேற்கு நகர திமுக செயலாளருமான அஸ்லம் மனு அளித்தார். அப்போது அதிராம்பட்டினத்தில் கிராம நிர்வாக அலுவலர் அலுவலகம் அமைக்க வேண்டிய அவசியம் குறித்தும் தாசில்தாரிடம் விளக்கி கூறினார். மனுவை பெற்றுக்கொண்ட தாசில்தார், உரிய நடவடிக்கை எடுப்பதாக தெரிவித்தார். இந்த சந்திப்பின்போது இந்திய யூனியன் முஸ்லீம் லீக் நகர செயலாளர் வழக்கறிஞர் முகம்மது தம்பி உள்ளிட்டோர் உடனிருந்தனர்.

spot_imgspot_imgspot_imgspot_img
spot_imgspot_imgspot_imgspot_img

More like this

அதிராம்பட்டினம் பேருந்து நிலையத்தில் மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணி சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம்.

அதிராம்பட்டினம் திமுக மேற்கு கழகம் முன்னிலையில், மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணி கட்சிகள் சார்பில் மத்திய அரசின் மக்கள் விரோத கொள்கைகளை கண்டித்து கண்டன...

கவுன்சிலர் முயற்சிக்கு பாராட்டு – நகரம் முழுவதும் கொசு ஒழிப்பு செய்ய...

அதிராம்பட்டினம் பகுதியில் சமீப காலமாக கொசு தொல்லை அதிகரித்து வருவதால் பொதுமக்கள் பெரும் சிரமத்தை எதிர்கொண்டு வருகின்றனர். குறிப்பாக 17வது வார்டு பகுதிகளில்...

அதிராம்பட்டினத்தில் கேஸ் விநியோகத்தில் தாமதம் – செயற்கை தட்டுப்பாடு உருவாக்கப்படுகிறதா?

அதிராம்பட்டினம் மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் சமீப நாட்களாக சமையல் எரிவாயு (LPG) விநியோகத்தில் கடுமையான தாமதம் ஏற்பட்டுள்ளதாக பொதுமக்கள் குற்றம் சாட்டுகின்றனர். புக்கிங்...
spot_imgspot_imgspot_imgspot_img