Sunday, February 1, 2026

​பத்திரப்பதிவு அலுவலகம்-பொதுமக்களை 10 நிமிடங்களுக்கு மேல் காத்திருக்கவைக்கக்கூடாது

spot_imgspot_imgspot_imgspot_img

பத்திரப்பதிவு அலுவலகங்களில் பொதுமக்களை 10 நிமிடங்களுக்குமேல் காத்திருக்க வைக்கக் கூடாது என அதிகாரிகளுக்கு பதிவுத்துறைத் தலைவர் குமரகுருபரன் உத்தரவிட்டுள்ளார். இது குறித்து அனைத்து மாவட்ட மற்றும் மாநில பத்திரப்பதிவு அலுவலகங்களுக்கு ஓர் 🗞சுற்றறிக்கையினை அனுப்பி வைத்துள்ளார். அதில் அவர் குறிப்பிட்டுள்ள விஷயங்கள் என்னவென்றால்,   

 தொழில்நுட்பக் காரணத்தால் ஆன்லைன் பதிவை மேற்கொள்ள இயலாத நிலையில்ஆஃப்லைன் முறையில் ஆவணங்களை பதிவு செய்யவும், பொதுமக்கள் குறைகளை உடனுக்குடன் தீர்க்க வேண்டும்.  

 மாவட்ட பதிவாளர்கள் தினமும் தங்கள் எல்லைக்கு உட்பட்ட 4 சார்பதிவாளர் அலுவலகங்களுக்கு சென்று கண்காணிக்க வேண்டும்  

முன்சரிபார்ப்பு முடிக்கப்பட்ட ஆவணங்கள் 10 நிமிடங்களுக்குள் பதிவு செய்யப்பட்டுவிட்டதாஆவணப்பதிவுக்காக மக்கள் 10 நிமிடங்களுக்கு மேல் காத்திருக்க வேண்டிய நிலை உள்ளதா என துல்லியமாக கண்காணிக்க வேண்டும்.  

பதிவு செய்யப்பட்ட 📜ஆவணங்கள் உடனுக்குடன் திரும்ப வழங்கப்படுகிறதாமக்களின் சந்தேகங்களுக்கு சரியான விளக்கம் அளிக்கப்பட்டு உள்ளதா எனவும் உறுதிசெய்யப்பட வேண்டும்.  

கணினி பழுதுகள் கட்டணமில்லா தொலைபேசி எண்ணுக்கு தெரிவிக்கப்பட்டு புகார் எண் பெறப்பட்டுள்ள எனவும் சரிபார்க்க வேண்டும்.

spot_imgspot_imgspot_imgspot_img

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

spot_imgspot_imgspot_imgspot_img

More like this

2026 திமுகவின் வாக்கு வங்கி சரியும் அபாயம் – முதல்வர் நேரடி...

அதிராம்பட்டினம் பழைய இமாம் ஷாஃபி பள்ளிக்கூடத்தின் பழைய நிலத்தை கையகப்படுத்த முயலும் உள்ளூர் திமுகவினரின் தொடர் சீண்டல்கள், சிறுபான்மை சமூகத்தில் ஆழமான மனமாற்றத்தை...

பீகார் முதல்வரின் ஈனச்செயல் : பகிரங்க மன்னிப்பு கேட்க வேண்டும் –...

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் தஞ்சை தெற்கு மாவட்டத் தலைவர் வழக்கறிஞர் ஹாஜா ஜியாவுதீன்  வெளியிட்டுள்ள அறிக்கையில் பிகார் மாநிலத்தில் நடைபெற்ற ஒரு நிகழ்ச்சியில்...

புதிய வாக்காளர்கள் தவறாமல் தங்களை இணைத்து கொள்ளவேண்டும் – அதிரை நகர...

அதிராம்பட்டினம் நகரில் புதிய வாக்காளர்கள் தங்களை இணைத்து கொள்ள, சிறப்பு முகாம் அந்தந்த வாக்குச்சவடிகளில் நாளை 13-12-2025 அன்று நடைப்பெற உள்ளன. இதனை புதிய...
spot_imgspot_imgspot_imgspot_img