Saturday, September 13, 2025

வெப்பத்தாக்கத்திலிருந்து மக்கள் தங்களை பாதுகாத்துக் கொள்வது எப்படி ? மாவட்ட ஆட்சியர் கூறும் அறிவுரை !

spot_imgspot_imgspot_imgspot_img

நடப்பாண்டு கோடை காலத்தில் வழக்கமான வெப்பநிலையை விட கூடுதலாக வெயிலின் தாக்கம் இருக்கும் என இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. எனவே வெயில் காலத்தில் மக்கள் கீழ்க்கண்ட ஆலோசனைகளை கடைப்பிடித்து வெயிலின் தாக்கத்திலிருந்து தங்களை தற்காத்துக்கொள்ளுமாறு மாவட்ட ஆட்சியர் ஆ. அண்ணாதுரை கேட்டுக்கொண்டுள்ளார்.

◆செய்யவேண்டியவை:-

1)தாகம் இல்லாவிடினும் , அவ்வப்போது போதுமான குடிநீரை அருந்த வேண்டும்.

2)லேசான ஆடைகள் , வெளிரிய ஆடைகள் , உடலை இறுக்கி பிடிக்காத தளர்வான முழுக்கை ஆடைகள் , பருத்தி நூல் துணி ஆடைகள் அணிதல் வேண்டும்.

3)வீட்டில் ஜன்னல் கதவுகளுக்கு திரைச்சீலை அமைத்திருப்பின் பகல் நேரங்களில் அவற்றை மூடிய நிலையிலும் , இரவு நேரங்களில் அவற்றை விலக்கி வைத்து வீட்டினை குளுமையாக இருக்கும் வகையில் பராமரித்துக்கொள்ள வேண்டும்.

4)மின்விசிறி பயன்படுத்தியும் மற்றும் குளிர்ந்த நீரில் அடிக்கடி குளித்தும் உடல் வெப்பத்தை குறைத்திட வேண்டும்.

5)வெளியில் செல்லும்போது குடை அல்லது தொப்பி மற்றும் காலணி அணிந்து செல்ல வேண்டும்.

6) இளநீர் , நுங்கு , தர்பூசணி மற்றும் கரும்புச்சாறு போன்றவற்றை அதிகமாக உட்கொள்ளவேண்டும்.

7)வீட்டில் செய்யப்பட்ட லஸ்ஸி , சாத நீர் , எலுமிச்சை சாறு , மோர் , ஓ.ஆர்.எஸ் எனப்படும்.

8)உப்புசர்க்கரை கரைசல் , உப்பு கலந்து கஞ்சி , பழரசங்கள் போன்றவற்றை பருகவும் வேண்டும்.

9)நீர்சத்து நிறைந்த உணவுப் பண்டங்களை உட்கொள்ளவும்.

10)வெயிலில் பயணம் மேற்கொள்ளும் போது உடன் குடிநீர் கொண்டு செல்ல வேண்டும்.

11)உடலுக்கு வெப்பம் தரும் உணவுகளை தவிர்க்கவும்.

12) கால்நடை மற்றும் வளர்ப்பு பிராணிகளை நிழலான இடத்தில கட்டி வைத்து அதற்கு தேவையான குடிநீர் மற்றும் தீவனம் அளிக்க வேண்டும்.

◆செய்யக்கூடாதவை:-

1)நண்பகல் 12.00 மணி முதல் 3.00 மணி வரை வெளியில் செல்வதை தவிர்க்க வேண்டும்.

2)மது , தேனீர் , காபி போன்றவற்றை
அருந்துவதை தவிர்க்க வேண்டும்.

3)அதிக புரதம்/ மாமிச கொழுப்பு சத்துள்ள மற்றும் கார வகைகளை தவிர்க்க வேண்டும்.

4)சர்க்கரை நோய், இருதய நோய் போன்ற நாள்பட்ட நோய்களால் பாதிக்கப்பட்டவர்கள் வெளியில் செல்ல தவிர்க்க வேண்டும்.

spot_imgspot_imgspot_imgspot_img

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

spot_imgspot_imgspot_imgspot_img

More like this

பட்டுக்கோட்டை – அதிராம்பட்டினம் இடையே இரவு நேர சிறப்பு பேருந்து..!!

தினசரி  மாலை 6:10 மணியளவில் சென்னை தாம்பரத்திலிருந்து புறப்பட்டு நள்ளிரவு 1:08 மணிக்கு பட்டுக்கோட்டை வழியாக ராமேஸ்வரம் செல்கிறது. அதிராம்பட்டினம் நகராட்சி மற்றும் அதன்...

அதிரை காதிர் முகைதீன் கல்லூரியில் 12 ஆம் வகுப்பு மாணவர்களுக்கான உயர்கல்வி...

காதிர் முகைதீன் ஆண்கள் மேல்நிலைப்பள்ளி 12 ஆம் வகுப்பு மாணவர்களுக்கான அடுத்து என்ன மற்றும் எங்கு படிக்கலாம் என்ற உயர்கல்வி வழிகாட்டல் நிகழ்ச்சி...

அதிரை காதிர் முகைதீன் கல்லூரியில் 12 ஆம் வகுப்பு மாணவிகளுக்கான உயர்கல்வி...

காதிர் முகைதீன் பெண்கள் மேல்நிலைப்பள்ளி 12 ஆம் வகுப்பு மாணவிகளுக்காக அடுத்து என்ன மற்றும் எங்கு படிக்கலாம் என்ற உயர்கல்வி வழிகாட்டல் நிகழச்சி...
spot_imgspot_imgspot_imgspot_img