Sunday, February 1, 2026

அதிரை தரகர்தெருவில் நடைபெற்ற சுற்றுச்சூழலை பாதுகாப்பது குறித்த ஆலோசனை கூட்டம் !

spot_imgspot_imgspot_imgspot_img

அதிராம்பட்டினம் தரகர்தெரு முகைதீன் ஜும்மா பள்ளிவாசலில் இன்று மதியம் 1.00 மணிக்கு தரகர் தெரு நிர்வாக கமிட்டி, தரகர்தெரு இளைஞர் நற்பணி மன்றத்தினர் மற்றும் அதிராம்பட்டினம் சுற்றுச்சூழல் மன்றம் 90.4 ன் நிர்வாகிகள் ஆகியோர் கலந்து கொண்டு தரகர் தெரு பகுதியில் தினசரி சேரும் குப்பைகளை அகற்ற நடவடிக்கை எடுப்பது, நீர் நிலைகளில் குப்பைகள் சேராமல் பராமரிப்பது பற்றி ஆலோசனை நடத்தினர்.

கூட்டத்தில் தரகர் தெரு நிர்வாக கமிட்டி தலைவர் ஆப்ரின்.எம். நெய்னாமுஹம்மது , உதவித்தலைவர் G. பசூல்கான் , K.M. நூர்முஹம்மது , S.முகைதீன் , S.A.M. முகைதீன் , ஜலிலா ஜூவல்லர்ஸ் ரஜீஸ்கான், அதிராம்பட்டினம் சுற்றுச்சூழல் மன்றம் 90.4 ன் தலைவர் வ. விவேகானந்தம் , துணை செயலாளர் மரைக்கா கே.இதிரிஸ் அஹமது , உறுப்பினர் M.B.அப்துல் ஹாலிம் ஆகியோர் கலந்து கொண்டனர். கூட்டத்தில் கீழ்க்கண்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன :

1.அதிராம்பட்டினம் பேரூராட்சி நிர்வாகம் சார்பில் தினந்தோறும் வீடு, வீடாக வந்து குப்பைகளை பெற தக்க நடவடிக்கை எடுக்க பேரூராட்சி செயல் அலுவலரை சந்திக்க முடிவு செய்யப்பட்டது.

2.குப்பைகள் அதிகம் சேருமிடங்களில் இப்பகுதி குடியிருப்புவாசிகளின் ஒத்துழைப்போடு இரும்பு கம்பி வலை குப்பைக் கூண்டுகள் வைக்கவும், அதனை சுற்றுச்சூழல் மன்றம் 90.4 ன் சார்பில் கண்காணிக்கவும் முடிவு செய்யப்பட்டது.

3.ரம்ஜான் பண்டிகை முடிந்தபின்னர் ஆண்கள் மற்றும் பெண்களுக்கு தனித்தனியாக குப்பைகள் பராமரிப்பு பற்றிய விழிப்புணர்வு கூட்டம் நடத்த முடிவு செய்யப்பட்டது.

4.பள்ளிவாசல் குளத்தில் சேர்ந்துள்ள பிளாஸ்டிக் கழிவுகளை பேரூராட்சி மற்றும் தன்னார்வ தொண்டர்கள் ஒத்துழைப்புடன் அகற்றவும் , குளக்கரையில் மரக்கன்றுகள் நட்டுபராமரிக்கவும் முடிவு செய்யப்பட்டது.

spot_imgspot_imgspot_imgspot_img

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

spot_imgspot_imgspot_imgspot_img

More like this

கல்வித்தந்தை மறைவு முதலமைச்சர், முஸ்லீம் லீக் பொதுச்செயலாளர் இரங்கல்.

அதிராம்பட்டினம் இமாம் ஷாஃபி கல்வி அறக்கட்டளையின் நிறுவனர் மற்றும் சீபோல் நிறுவனத்தின் தலைவருமான சிறந்த தொழிலதிபர் எம்.எஸ். தாஜூதீன் அவர்கள் வயது மூப்பின்...

பலநாள் கனவு நிறைவேறியது – உற்சாக வெள்ளத்தில் அதிரையர்கள்!

அதிராம்பட்டினம் வழியாக செல்லும் தாம்பரம் - செங்கோட்டை அதிவிரைவு ரயில் மற்றும் தாம்பரம் - ராமேஸ்வரம் பாம்பன் விரைவு ரயில் ஆகியவற்றுக்கு அதிராம்பட்டினத்தில்...

IUML தேசிய தலைவரை சந்தித்த அதிரை முஸ்லீம் லீக்கினர் – மாநாட்டிற்கு...

அதிராம்பட்டினம் நகர இந்திய யூனியன் முஸ்லிம் லீக் நகர நிர்வாகிகள், கட்சியின் தேசிய தலைவர் பேராசிரியர் தகைசால் தமிழர் கே.எம். காதர் முகைதீன்...
spot_imgspot_imgspot_imgspot_img