Saturday, March 21, 2026

விறுவிறுப்பாக நடைபெற்ற இறுதிப்போட்டியில் பிரான்ஸ் அணி சாம்பியன் !(படங்கள்)

spot_imgspot_imgspot_imgspot_img

உலகக்கோப்பை கால்பந்து தொடர் போட்டி ரஷ்யாவில் கடந்த மாதம் 14ம் தேதி முதல் தொடங்கி நடைபெற்று வருகிறது. இதில் பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட ஜெர்மனி , அர்ஜென்டினா , போர்ச்சுகல் போன்ற நட்சத்திர அணிகள் லீக் சுற்றோடு வெளியேறி அதிர்ச்சி அளித்தன. மற்றொரு நட்சத்திர அணியான பிரேசில் காலிறுதியில் பெல்ஜியத்திடம் தோல்வி அடைந்து வெளியேறியது.

இத்தொடர் முழுவதும் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்திய பிரான்ஸ் அணியும் குரோஷியா அணியும் இறுதிப் போட்டிக்கு தகுதி பெற்றனர். இந்நிலையில் இறுதிபோட்டி இன்று ஞாயிற்றுக்கிழமை இந்திய நேரப்படி இரவு 8.30 மணியளவில் மாஸ்கோ நகரில் நடைபெற்றது.

இதில் பிரான்ஸ் – குரோஷியா ஆகிய அணிகள் பலப்பரீட்சை நடத்தின. இதில் இரு அணிகளும் சிறப்பாக விளையாடின. ஆனாலும் குரோஷியாவின் தடுப்பு அரணை உடைத்த பிரான்ஸ் வீரர்கள் 4 கோல் அடித்தனர். குரோஷியா அணி தன் பங்கிற்கு 2 கோல் அடித்தது. ஆட்டநேர முடிவில் பிரான்ஸ் அணி 4 – 2 என்ற கோல் கணக்கில் குரோஷியாவை வீழ்த்தி உலக கோப்பை கால்பந்து சாம்பியன் பட்டத்தை தட்டிச் சென்றது.

spot_imgspot_imgspot_imgspot_img

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

spot_imgspot_imgspot_imgspot_img

More like this

ரியாத் தமிழ்ச்சங்க கைப்பந்து போட்டியில் அதிராம்பட்டினம் ஸ்பார்டன் அணி சாதனை!

சவூதி அரேபியா ரியாத் நகரில் தமிழ்ச்சங்கம் சமீபத்தில் நடத்திய சிறப்பு கைப்பந்து போட்டியில், அதிராம்பட்டினம் ஸ்பார்டன் அணி அதிரடி வெற்றி பெற்று முதலிடத்தை...

நான் ரெடி.. நீங்க ரெடியா..?

அதிரை இமாம் ஷாஃபி பள்ளி சார்பில் ஒவ்வொரு வருடமும் டிசம்பர் மாத இறுதியில் மாரத்தான் மற்றும் வாக்கத்தான் போட்டி மனித வாழ்வின் ஆரோக்கியம்...

அதிரையில் நடைபெற்ற விளையாட்டு வீரர்களை பாராட்டி ஊக்கப்படுத்தும் விழா!(படங்கள்)

அதிரை கடற்கரைத்தெரு தீனுல் இஸ்லாமிய இளைஞர்கள் நற்பணி மன்றம் மற்றும் கடற்கரைத்தெரு விளையாட்டு வீரர்கள் இணைந்து நடத்திய விளையாட்டு வீரர்களை ஊக்கப்படுத்தும் பாராட்டு...
spot_imgspot_imgspot_imgspot_img