Tuesday, March 24, 2026

பாப்புலர் ஃப்ரண்ட் சார்பில் கஜா புயல் வீடுகள் புனரமைப்பு பணி~மாநில துணைத்தலைவர் நேரில் ஆய்வு !

spot_imgspot_imgspot_imgspot_img

கடந்த நவம்பர் 15ம் தேதி தமிழகத்தை தாக்கிய கஜா புயலால் தமிழகத்தின் டெல்டா மாவட்டங்களில் கடுமையான சேதம் ஏற்பட்டது. கஜா புயல் தாக்கிய தினத்திலிருந்தே சமுதாய இயக்கங்கள் மீட்பு மற்றும் நிவாரண பணிகளில் ஈடுபட்டனர். அதேபோல் பாப்புலர் ஃப்ரண்ட்  ஆஃப் இந்தியாவின் சார்பிலும் மீட்பு மற்றும் நிவாரண பணிகள் துரிதமாக செய்யப்பட்டன.

இதன் அடுத்த கட்டமாக பாப்புலர் ஃப்ரண்ட் ‘வீடு கட்டும் திட்டத்தை’ (Housing Project) கையிலெடுத்து திருவாரூர் மற்றும் தஞ்சை மாவட்டங்களில் நூறு வீடுகளும், நாகை மாவட்டத்தில் முப்பத்தைந்து வீடுகள் என மொத்தம் நூற்றி முப்பத்தைந்து வீடுகள் கட்டிக் கொடுத்து பாதிக்கப்பட்டவர்களை மீள் குடியேற்றம் செய்திட வேண்டும் என திட்டமிட்டிருந்தது. அதன் படி வீடுகளை கட்டும் பணி தொடர்ந்து நடைபெற்றுக் கொண்டிருக்கின்றது.

இந்த பணிகள் நடைபெற்று வரும் பகுதிகளான திருவாரூர் மாவட்டம், கூத்தாநல்லூர், அத்திக்கடை ஆகிய பகுதிகளுக்கு பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியாவின் மாநில துணைத்தலைவர் எம். முஹம்மது சேக் அன்சாரி நேற்று (06.02.2019) நேரில் சென்று பார்வையிட்டு ஆய்வு செய்தார். இந்நிகழ்வின் போது மாநில செயற்குழு உறுப்பினர் நவாஸ் மற்றும் கூத்தாநல்லூர் நகர செயலாளர் H.முஹம்மது ரிஸ்வானுதீன் மற்றும் மாவட்ட நிர்வாகிகள் உடனிருந்தனர்.

spot_imgspot_imgspot_imgspot_img

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

spot_imgspot_imgspot_imgspot_img

More like this

நியூசிலாந்து வாழ்அதிரையர்களின் நோன்பு பெருநாள் கொண்டாட்டம்!

அதிரை நகராட்சியின் “உப்பி போன” விளையாட்டுத் திட்டம்!

தஞ்சாவூர் மாவட்டம் அதிராம்பட்டினம் நகராட்சியில், கடந்த சில தினங்களுக்கு முன்பு இளைஞர்களுக்காக வழங்கப்பட்ட விளையாட்டு உபகரணங்கள் முறையான பராமரிப்பின்றி வீணான சம்பவம் பெரும்...

பட்டுக்கோட்டை : அதிமுக கூட்டணியில் மீண்டும் NR போட்டி? – புது...

பட்டுக்கோட்டை சட்டமன்றத் தொகுதியில் வரும் தேர்தலை முன்னிட்டு அரசியல் சூழல் பரபரப்பாகி வருகிறது. குறிப்பாக திமுக கூட்டணியில் வேட்பாளர் தேர்வு குறித்து கட்சித்...
spot_imgspot_imgspot_imgspot_img