Sunday, March 22, 2026

அதிரை ஈசிஆர் சாலையில் விபத்து !

spot_imgspot_imgspot_imgspot_img

அதிரை – முத்துப்பேட்டை ஈசிஆர் சாலையில் இன்று இரவு திடீர் சாலை விபத்து ஏற்பட்டது.

லோகநாதன்(வயது-42) என்பவர் முத்துப்பேட்டை சாலையில் உள்ள பெட்ரோல் பங்கில் பெட்ரோல் நிரப்பிவிட்டு, திரும்பி கொண்டிருந்தார். அதேசமயம் நாடிமுத்து(வயது-50) என்பவர் சாலையை கடக்க முயன்றுள்ளார்.

அப்போது திடீரென லோகநாதன் ஓட்டி வந்த இரு சக்கர வாகனம், சாலையை கடக்க முயன்ற நாடிமுத்து மீது மோதியது. இந்த விபத்தில் இருவருக்குமே பலத்த காயம் ஏற்பட்டது.

உடனே அவர்கள் அதிராம்பட்டினம் தமுமுக ஆம்புகன்ஸ் மூலம் அதிரை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டனர். அங்கு அவர்களுக்கு முதலுதவி சிகிச்சை அளிக்கப்பட்டது.

பின்னர் அவர்கள் மேல் சிகிச்சைக்காக தமுமுக ஆம்புலன்ஸ் பட்டுக்கோட்டை அரசு மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டனர். அங்கு அவர்களுக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

spot_imgspot_imgspot_imgspot_img

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

spot_imgspot_imgspot_imgspot_img

More like this

நியூசிலாந்து வாழ்அதிரையர்களின் நோன்பு பெருநாள் கொண்டாட்டம்!

அதிரை நகராட்சியின் “உப்பி போன” விளையாட்டுத் திட்டம்!

தஞ்சாவூர் மாவட்டம் அதிராம்பட்டினம் நகராட்சியில், கடந்த சில தினங்களுக்கு முன்பு இளைஞர்களுக்காக வழங்கப்பட்ட விளையாட்டு உபகரணங்கள் முறையான பராமரிப்பின்றி வீணான சம்பவம் பெரும்...

பட்டுக்கோட்டை : அதிமுக கூட்டணியில் மீண்டும் NR போட்டி? – புது...

பட்டுக்கோட்டை சட்டமன்றத் தொகுதியில் வரும் தேர்தலை முன்னிட்டு அரசியல் சூழல் பரபரப்பாகி வருகிறது. குறிப்பாக திமுக கூட்டணியில் வேட்பாளர் தேர்வு குறித்து கட்சித்...
spot_imgspot_imgspot_imgspot_img