Sunday, March 22, 2026

கடலோர மாவட்டங்களுக்கு ரெட் அலர்ட் !!

spot_imgspot_imgspot_imgspot_img

தமிழகத்தின் கடலோர மாவட்டங்கள் மற்றும் புதுச்சேரிக்கு, ஏப்ரல் 30-ம் தேதி மற்றும் மே 1-ம் தேதி ஆகிய இரண்டு நாள்களுக்கு ரெட் அலர்ட் விடுக்கப்பட்டுள்ளது.

இந்தியப் பெருங்கடல் – தென்மேற்கு வங்கக் கடலுக்கு இடையே உருவாகியுள்ள குறைந்த காற்றழுத்தத் தாழ்வு மண்டலம், அடுத்த 24 மணி நேரத்தில் காற்றழுத்தத் தாழ்வு மண்டலமாக மாறும் என்று இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்திருக்கிறது.

இதுகுறித்து செய்தியாளர்களிடம் பேசிய சென்னை வானிலை ஆய்வு மைய இயக்குநர் பாலச்சந்திரன், “காற்றழுத்தத் தாழ்வுப் பகுதி சென்னையிலிருந்து 1,500 கி.மீ தூரத்தில் நிலைகொண்டிருக்கிறது. இது காற்றழுத்தத் தாழ்வு மண்டலமாக நாளை மாறும். அந்தத் தாழ்வு மண்டலம், வரும் 27 அல்லது 28-ம் தேதி வாக்கில் புயலாக மாறும். அப்படிப் புயலாக மாறும்பட்சத்தில், அது, தமிழகத்தின் வட கடலோர மாவட்டங்களை நோக்கி வர வாய்ப்பிருக்கிறது. இதனால், வரும் 27 மற்றும் 28 ஆகிய தேதிகளில் கனமழை பெய்ய வாய்ப்பிருக்கிறது” என்றார். இந்தப் புயலுக்கு ஃபனி என்று பெயரிடப்பட்டுள்ளது.

இந்திய வானிலை ஆய்வு மையம் விடுத்துள்ள எச்சரிக்கையில், `வட தமிழகம் மற்றும் இலங்கையின் தெற்குக் கடலோரப் பகுதிகளையொட்டி, ஃபனி புயல் வடமேற்காக ஏப்ரல் 30-ம் தேதி வாக்கில் நகரும். இதனால், ஏப்ரல் 28-ம் தேதி முதலே மழைப்பொழிவு தொடங்கி, அடுத்த சில நாள்களுக்குத் தீவிரமடையும். இதனால், தமிழகத்தின் பெரும்பாலான பகுதிகளில் கனமழை முதல் மிகக் கனமழை வரை பெய்யக்கூடும். ஒருசில இடங்களில் அதிக கனமழை பெய்ய வாய்ப்பிருக்கிறது’ என்று தெரிவிக்கப்பட்டிருக்கிறது.

மேலும், தமிழகம், புதுச்சேரி மற்றும் இலங்கைக் கடலோரப் பகுதிகளில், ஏப்ரல் 29-ம் தேதி மணிக்கு 90 – 100 கி.மீ வேகம் முதல் 115 கி.மீ வரை காற்று வீசக்கூடும் எனவும் இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. அதேநேரம், ஏப்ரல் 30-ம் தேதி, காற்றின் வேகம் மணிக்கு 115 கி.மீ என்ற நிலையை எட்டும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனால், ஏப்ரல் 25-ம் தேதி முதல் மீனவர்கள் கடலுக்குச் செல்ல வேண்டாம் என்று அறிவுறுத்தப்பட்டுள்ளது. இந்திய வானிலை ஆய்வு மைய எச்சரிக்கையின்படி,  புதுக்கோட்டை, தஞ்சாவூர், நாகப்பட்டினம் மற்றும்  புதுச்சேரியின் காரைக்கால் ஆகிய மாவட்டங்களில் ஏப்ரல் 29-ம் தேதி மிகக் கனமழை பெய்யலாம் என்றும் தெரிவிக்கப்பட்டிருக்கிறது.

spot_imgspot_imgspot_imgspot_img

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

spot_imgspot_imgspot_imgspot_img

More like this

தேர்தல் 2026 : திமுக கூட்டணியில் முஸ்லீம் லீக், மமகவுக்கு 2...

தமிழ்நாடு சட்டசபை தேர்தல் ஏப்ரல் மாதத்தில் நடைபெற உள்ளது. இந்த தேர்தலில் தி.மு.க. தலைமையில் மெகா கூட்டணி அமைக்கப்பட்டு உள்ளது. இந்த கூட்டணியில்...

IUML தேசிய தலைவரை சந்தித்த அதிரை முஸ்லீம் லீக்கினர் – மாநாட்டிற்கு...

அதிராம்பட்டினம் நகர இந்திய யூனியன் முஸ்லிம் லீக் நகர நிர்வாகிகள், கட்சியின் தேசிய தலைவர் பேராசிரியர் தகைசால் தமிழர் கே.எம். காதர் முகைதீன்...

அதிரை ரயில் நிறுத்தம் தொடர்பாக போராட்டம்தான் தீர்வு என்றால் அதற்கும் தயார்- ...

அதிராம்பட்டினம் ரயில் நிறுத்தம் தொடர்பாக தேவைப்பட்டால் திமுக, காங்கிரஸ், முஸ்லீம் லீக் உள்ளிட்ட தோழமை கட்சிகளை ஒன்றிணைத்து ஒன்றிய ரயில்வே நிர்வாகத்தை கண்டிக்கும்...
spot_imgspot_imgspot_imgspot_img