Monday, February 2, 2026

தெலுங்கானா மாநில ஆளுநராகப் பதவியேற்றார் தமிழிசை சவுந்திரராஜன் !

spot_imgspot_imgspot_imgspot_img

மருத்துவர், சென்னை மருத்துவப் பிரிவு செயலாளர், தமிழக பா.ஜ.க கட்சித் தலைவர் போன்ற பல பொறுப்புகளை வகித்த தமிழிசை சௌந்தரராஜனுக்கு, தற்போது மீண்டும் ஒரு பெரிய பொறுப்பு வழங்கப்பட்டுள்ளது. கடந்த செப்டம்பர் 1-ம் தேதி, அவர் தெலங்கானா மாநில ஆளுநராக நியமிக்கப்பட்டார். இந்த அறிவிப்புக்குப் பிறகு, அவர் வகித்துவந்த பா.ஜ.க தலைவர் மற்றும் பா.ஜ.க-வின் அடிப்படை உறுப்பினர் பதவியிலிருந்து ராஜினாமாசெய்தார்.

இந்நிலையில் இன்று, தெலங்கானா ஆளுநராகப் பதவியேற்றுக் கொண்டார், தமிழிசை. இவரின் பதவியேற்பு விழா ஹைதராபாத்தில் உள்ள ராஜ்பவனில் நடைபெற்றது. அம்மாநில உயர் நீதிமன்ற தலைமை நீதிபதி ராகவேந்திரா எஸ். சவுகான், தமிழிசைக்கு பதவிப் பிரமாணம் செய்துவைத்தார்.

இந்நிகழ்ச்சியில், தெலங்கானா முதல்வர் சந்திரசேகர ராவ், தமிழக துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம், மீன்வளத்துறை அமைச்சர் ஜெயக்குமார், அமைச்சர்கள் தங்கமணி, வேலுமணி, சமத்துவ மக்கள் கட்சித் தலைவர் சரத்குமார், ராதிகா சரத்குமார், தே.மு.தி.க பொருளாளர் பிரேமலதா விஜயகாந்த் போன்ற பல முக்கியத் தலைவர்களும் தெலங்கானா மாநிலத்தின் அரசியல் தலைவர்கள் மற்றும் அதிகாரிகளும் கலந்துகொண்டனர்.

தான் ஆளுநராகப் பதவியேற்ற பிறகு, தன் தந்தை குமரி அனந்தன் காலில் விழுந்து வணங்கினார். தமிழிசை சௌந்தரராஜன், தெலங்கானாவின் ஆளுநராகப் பொறுப்பேற்றதால், அம்மாநிலத்தின் முதல் பெண் ஆளுநர் என்ற பெருமையைப் பெற்றுள்ளார்.

spot_imgspot_imgspot_imgspot_img

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

spot_imgspot_imgspot_imgspot_img

More like this

2026 திமுகவின் வாக்கு வங்கி சரியும் அபாயம் – முதல்வர் நேரடி...

அதிராம்பட்டினம் பழைய இமாம் ஷாஃபி பள்ளிக்கூடத்தின் பழைய நிலத்தை கையகப்படுத்த முயலும் உள்ளூர் திமுகவினரின் தொடர் சீண்டல்கள், சிறுபான்மை சமூகத்தில் ஆழமான மனமாற்றத்தை...

பீகார் முதல்வரின் ஈனச்செயல் : பகிரங்க மன்னிப்பு கேட்க வேண்டும் –...

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் தஞ்சை தெற்கு மாவட்டத் தலைவர் வழக்கறிஞர் ஹாஜா ஜியாவுதீன்  வெளியிட்டுள்ள அறிக்கையில் பிகார் மாநிலத்தில் நடைபெற்ற ஒரு நிகழ்ச்சியில்...

புதிய வாக்காளர்கள் தவறாமல் தங்களை இணைத்து கொள்ளவேண்டும் – அதிரை நகர...

அதிராம்பட்டினம் நகரில் புதிய வாக்காளர்கள் தங்களை இணைத்து கொள்ள, சிறப்பு முகாம் அந்தந்த வாக்குச்சவடிகளில் நாளை 13-12-2025 அன்று நடைப்பெற உள்ளன. இதனை புதிய...
spot_imgspot_imgspot_imgspot_img