Wednesday, March 18, 2026

மூன்று நம்பர் லாட்டரி கும்பலை பிடிக்க தீவிரம் காட்டுமா அதிரை காவல்துறை?

spot_imgspot_imgspot_imgspot_img

விழுப்புரம் அருகே 3நம்பர் லாட்டரியினால் பாதிக்கப்பட்ட பொற்கொல்லர் ஒருவர் குடும்பத்துடன் சயனைடு தின்று தற்கொலை செய்து கொண்ட சம்பவம் தமிழகம் மட்டுமின்றி இந்தியாவையே சோகத்தில். ஆழ்த்தியுள்ளன.

மூன்று சிறுமிகள் உள்ளிட்ட ஐவர் கொலைக்கு காரணம் என தனது மரணத்திற்கு முன் அந்த பொற்கொல்லர் வீடியோ மூலமாக வாக்கு மூலம் அளித்துள்ளார், அதில் தாம் லாட்டரிக்கு அடிமையாகி இன்று தற்கொலை வரையில் தள்ளப்பட்டுள்ளது போன்ற வார்த்தைகள் அதில் இடம்பெற்று இருந்தன.

இதனை அடுத்து உஷாரான விழுப்புரம் காவல்துறை, கள்ள சந்தை லாட்டரி விற்பனை செய்த 16நபர்களை பிடித்து வழக்கு பதிவு செய்துள்ளனர்.

விஷயம் விபரீதமான உடன் வரிந்துகட்டும் காவல் துறை முன்னதாகவே விழித்துகொண்டு இந்த மூன்று நம்பர் லாட்டரி விற்பனையாளர்களை கைது செய்ய வேண்டும்.

அதிராம்பட்டினம் கடைதெரு தக்வாப்பள்ளி மீன் மார்கெட் உள்ளிட்ட பகுதிகளில் கொடிகட்டி பறக்கும் கள்ள சந்தை 3நம்பர் லாட்டரி விற்பனையாளர்களை கைது செய்து குண்டர் சட்டத்தில் அடைக்க வேண்டும் எனபது சமூக ஆர்வலர்களின் வேண்டுகோளாக உள்ளது.

செயல்படுத்துமா காவல்துறை?

spot_imgspot_imgspot_imgspot_img

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

spot_imgspot_imgspot_imgspot_img

More like this

அதிரை நகராட்சியின் “உப்பி போன” விளையாட்டுத் திட்டம்!

தஞ்சாவூர் மாவட்டம் அதிராம்பட்டினம் நகராட்சியில், கடந்த சில தினங்களுக்கு முன்பு இளைஞர்களுக்காக வழங்கப்பட்ட விளையாட்டு உபகரணங்கள் முறையான பராமரிப்பின்றி வீணான சம்பவம் பெரும்...

பட்டுக்கோட்டை : அதிமுக கூட்டணியில் மீண்டும் NR போட்டி? – புது...

பட்டுக்கோட்டை சட்டமன்றத் தொகுதியில் வரும் தேர்தலை முன்னிட்டு அரசியல் சூழல் பரபரப்பாகி வருகிறது. குறிப்பாக திமுக கூட்டணியில் வேட்பாளர் தேர்வு குறித்து கட்சித்...

அதிராம்பட்டினம் பேருந்து நிலையத்தில் மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணி சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம்.

அதிராம்பட்டினம் திமுக மேற்கு கழகம் முன்னிலையில், மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணி கட்சிகள் சார்பில் மத்திய அரசின் மக்கள் விரோத கொள்கைகளை கண்டித்து கண்டன...
spot_imgspot_imgspot_imgspot_img