Monday, February 2, 2026

பட்டுக்கோட்டை : பள்ளி ஆண்டுவிழாவில் சட்டமன்ற உறுப்பினர் பங்கேற்பு !

spot_imgspot_imgspot_imgspot_img

பட்டுக்கோட்டையில் அமைந்துள்ள புனித தாமஸ் மேல்நிலைப்பள்ளியில் நேற்று ஆண்டு விழா நடைப்பெற்றது.

இவ்விழாவின் சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்ட பட்டுக்கோட்டை சட்டமன்ற உறுப்பினர் சி.வி. சேகர் ஆற்றிய சிறப்புரையில், தமிழகரசு கல்வி மேம்பாட்டிற்காக நல்ல திட்டங்களை வகுத்து செயல்படுத்தி வருவதாக தெரிவித்தார்.

மேலும் மாணவர்கள் கல்வியறிவில் சிறந்து விளங்கி, அரசு சலுகைகளை முழுவதுமாக பெற்று சமூகத்தில் உயர்ந்து நிற்க பிரார்த்திப்பதாகவும் அவர் தெரிவித்தார்.

இப்பள்ளியில் பல்வேறு விளையாட்டு போட்டிகளில் வென்ற மாணாக்கர்களுக்கு பரிசுகள் வழங்கி கவுரவிக்கப்பட்டன. பள்ளி மாணவ,மாணவிகளின் கலை நிகழ்ச்சிகள் கண்ணை கவரும் வண்ணம் அழகாக நடந்தேறியது.

இவ்விழாவில் பட்டிமன்ற பேச்சாளர் மதுக்கூர் ராமலிங்கம் உள்ளிட்ட பெற்றோர் ஆசிரியர் கழக பொறுப்பாளர்கள் கலந்துக்கொண்டனர்.

spot_imgspot_imgspot_imgspot_img

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

spot_imgspot_imgspot_imgspot_img

More like this

கல்வித்தந்தை மறைவு முதலமைச்சர், முஸ்லீம் லீக் பொதுச்செயலாளர் இரங்கல்.

அதிராம்பட்டினம் இமாம் ஷாஃபி கல்வி அறக்கட்டளையின் நிறுவனர் மற்றும் சீபோல் நிறுவனத்தின் தலைவருமான சிறந்த தொழிலதிபர் எம்.எஸ். தாஜூதீன் அவர்கள் வயது மூப்பின்...

பலநாள் கனவு நிறைவேறியது – உற்சாக வெள்ளத்தில் அதிரையர்கள்!

அதிராம்பட்டினம் வழியாக செல்லும் தாம்பரம் - செங்கோட்டை அதிவிரைவு ரயில் மற்றும் தாம்பரம் - ராமேஸ்வரம் பாம்பன் விரைவு ரயில் ஆகியவற்றுக்கு அதிராம்பட்டினத்தில்...

IUML தேசிய தலைவரை சந்தித்த அதிரை முஸ்லீம் லீக்கினர் – மாநாட்டிற்கு...

அதிராம்பட்டினம் நகர இந்திய யூனியன் முஸ்லிம் லீக் நகர நிர்வாகிகள், கட்சியின் தேசிய தலைவர் பேராசிரியர் தகைசால் தமிழர் கே.எம். காதர் முகைதீன்...
spot_imgspot_imgspot_imgspot_img