Saturday, March 21, 2026

அதிரையில் உள்ள ஜுமுஆ பள்ளிகளின் ஜுமுஆ தொழுகை நேரம் மாற்றம் !

spot_imgspot_imgspot_imgspot_img

கொரோனா வைரஸ் தடுப்பு முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக தமிழகம் முழுவதும் வெள்ளிக்கிழமை நடைபெறும் ஜுமுஆ தொழுகைகளை விரைவாக நடத்தி முடிக்க வேண்டும் என தமிழ் மாநில உலமா சபை கேட்டுக்கொண்டது.

அதனடிப்படையில் அதிரையில் இன்று(20/03/2020) நடைபெற உள்ள ஜுமுஆ நேரங்களை மாற்றியமைத்து அந்தந்த ஜுமுஆ பள்ளி நிர்வாக கமிட்டியினர் அறிவிப்பு செய்துள்ளனர். அதிரையில் உள்ள ஜுமுஆ பள்ளிகளின் மாற்றியமைக்கப்பட்ட நேரம் பின்வருமாறு :

ஆசாத் நகர் முகைதீன் ஜுமுஆ பள்ளி :

ஜும்மா சொற்பொழிவு சரியாக பகல் 1 மணிக்கு தொடங்கி, 1.10 மணிக்கு குத்பாவும், 1.15 மணிக்கு ஜும்மா தொழுகையும் நடைபெறும். எனவே தொழுகையாளிகள் அனைவரும் சரியான நேரத்திற்கு பள்ளிக்கு வருமாறு ஆசாத் நகர் முகைதீன் ஜுமுஆ பள்ளிவாசல் நிர்வாகக் கமிட்டி சார்பில் கேட்டுக்கொண்டுள்ளனர்.

கடற்கரைத்தெரு ஜுமுஆ பள்ளி :

பகல் 12.40 மணி முதல் 12.55 மணி வரை பயானும், 12.55 மணிக்கு குத்பாவும், 1.05 மணிக்கு ஜும்மா தொழுகையும் நடைபெறும். மேலும் தொழுகையாளிகள் அனைவரும் அவரவர் இல்லங்களில் ஒழு செய்துவிட்டு, குறித்த நேரத்தில் பள்ளிவாசலுக்கு வருமாறு கடற்கரைத்தெரு ஜுமுஆ பள்ளி நிர்வாகக் கமிட்டி சார்பாக கேட்டுக்கொண்டுள்ளனர்.

புதுமனைத்தெரு முஹ்யித்தீன் ஜுமுஆ பள்ளி :

குத்பா உரை பகல் 1 மணிக்கு தொடங்கி, ஜும்மா தொழுகை 1.20 க்குள் நிறைவடையும். பயான் நடைபெறாது.

எனவே, தொழுகையாளிகள் அவரவர் இல்லங்களில் ஒழு செய்துவிட்டு குறித்த நேரத்தில் முஹ்யித்தீன் ஜுமுஆ பள்ளிக்கு வருமாறும், முன் பின் சுன்னத் தொழுகைகளை தங்களது வீடுகளில் தொழுது கொள்ளுமாறும் புதுமனைத்தெரு முஹ்யித்தீன் ஜும்மா பள்ளிவாசல் நிர்வாகக் கமிட்டி சார்பில் கேட்டுக்கொண்டுள்ளனர்.

பெரிய ஜுமுஆ பள்ளி :

பகல் 12.40 மணி முதல் 12.50 மணி வரை பயானும், 12.50 மணிக்கு குத்பாவும், 1.00 – 1.10 மணிக்குள் ஜுமுஆ தொழுகை நடைபெறும் எனவும், தொழுகையாளிகள் அனைவரும் அவரவர் இல்லங்களிலேயே ஒழு செய்துவிட்டு குறித்த நேரத்தில் பள்ளிவாசலுக்கு வருமாறு பெரிய ஜுமுஆ பள்ளிவாசல் நிர்வாகக் கமிட்டி சார்பில் கேட்டுக்கொண்டுள்ளனர்.

A.J. ஜுமுஆ பள்ளி :

பகல் 12.40 மணி முதல் 12.55 மணி வரை பயானும், 12.55 மணிக்கு குத்பாவும், 1.05 மணிக்கு ஜுமுஆ தொழுகையும், தொழுகையின்போது ‘குனூத்’ ம் ஓதப்படும்.

எனவே தொழுகையாளிகள் அனைவரும் குறித்த நேரத்தில் பள்ளிவாசலுக்கு வருமாறு A.J. ஜுமுஆ பள்ளிவாசல் நிர்வாகக் கமிட்டி சார்பில் கேட்டுக்கொள்ளப்படுகிறது.

spot_imgspot_imgspot_imgspot_img

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

spot_imgspot_imgspot_imgspot_img

More like this

மகளிர் உரிமைத்தொகை கிடைக்கப் பெறாதவர்கள் விண்னப்பிக்க வாய்ப்பு!

அதிராம்பட்டினத்தில் மகளிர் இரண்டாம் கட்டமாக உரிமைத்தொகை விண்ணப்பித்தவர்களுக்கு உதவித்தொகை வழங்கும் திட்டம் தொடங்கப்பட்ட நிலையில் விடுவிக்கப்பட்ட நபர்கள் விண்ணப்செய்யலாம் என தமிழக அரசு...

அதிரை சாலைகளில் மாடுகளால் ஏற்படும் விபத்துகள்: நகராட்சி மாடு பிடி நடவடிக்கை...

அதிராம்பட்டினம் சாலைகளில் சுற்றித்திரியும் மாடுகளால்  விபத்துகள் அதிகரித்துள்ளன. கூட்டமாக அமர்ந்து வாகனங்கள் நிலைதடுமாற்றம் ஏற்படுத்துவதாக நகராட்சி கூறுகிறது. இந்த விபத்துக்களுக்கு காரணம் மாடு வளர்ப்பவர்கள்...

பட்டுக்கோட்டை – அதிராம்பட்டினம் இடையே இரவு நேர சிறப்பு பேருந்து..!!

தினசரி  மாலை 6:10 மணியளவில் சென்னை தாம்பரத்திலிருந்து புறப்பட்டு நள்ளிரவு 1:08 மணிக்கு பட்டுக்கோட்டை வழியாக ராமேஸ்வரம் செல்கிறது. அதிராம்பட்டினம் நகராட்சி மற்றும் அதன்...
spot_imgspot_imgspot_imgspot_img