Wednesday, March 18, 2026

அதிரையரின் பணிக்கு வேட்டுவைத்த வாட்ஸ்அப்!

spot_imgspot_imgspot_imgspot_img

முகநூல், வாட்ஸ்அப் போன்ற சமூக வலைத்தளங்களுக்கு அதிரையிலும் ஆயிரக்கணக்கானோர் அடிமையாகி உள்ளனர். குறிப்பாக ஏன் நாம் அதனை பயன்படுத்துகின்றோம் என்ற புரிதல் கூட இல்லாமல் பலர் இருக்கின்றனர். இதனால் அலுவலகம் உள்ளிட்ட முக்கியமான இடங்களிலும் தேவையின்றி சமூக வலைத்தளங்களை நாம் பயன்படுத்தும் சூழல் நிலவுகிறது.

இந்த நிலையில், துபாயின் பிரபல நிறுவனத்தில் பணிப்புரியும் அதிரையர் ஒருவர், அலுவலக நேரத்தில் வாட்ஸ்அப் பயன்படுத்தியதாக கூறப்படுகிறது. ப்ராஜெக்ட் டிஸ்கஷனில் தன்னையும் மறந்து வாட்ஸ்அப் க்ரூப்களை பார்த்துக்கொண்டிருந்த அவரை கவனித்த டீம் லீடர், இதுகுறித்து தனது மேனேஜரிடம் புகார் அளித்திருக்கிறார். இதனையடுத்து அதிரையருக்கு அந்த நிறுவனம் மெமோ கொடுத்துள்ளது. இதனால் அவரின் புரோமோசன் பாதிக்கப்படும் என வேதனையுடன் கூறிய உறவினர், தேவையற்ற வாட்ஸ்அப் க்ரூப்களில் இல்லாமல் இருப்பது நல்லது என தெரிவித்தார்.

இது ஒருபுறம் என்றால், நாம் அதிகளவிலான க்ரூப்பில் இருப்பதால் சில முக்கியமான தகவல்கள் பத்துடன் பதினொன்றாக நமது கண்ணில் படாமல் இருந்து விடுகிறது. இதனை தடுக்க தேவையற்ற க்ரூப்களில் இருந்து வெளியேறிவிடுவது நம் நேரத்தை பயனுள்ள வகையில் செலவிட உதவுவதுடன் வாட்ஸ்அப்பை ஆக்கப்பூர்வமாக பயன்படுத்த முடியும்.

spot_imgspot_imgspot_imgspot_img

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

spot_imgspot_imgspot_imgspot_img

More like this

அதிரை நகராட்சியின் “உப்பி போன” விளையாட்டுத் திட்டம்!

தஞ்சாவூர் மாவட்டம் அதிராம்பட்டினம் நகராட்சியில், கடந்த சில தினங்களுக்கு முன்பு இளைஞர்களுக்காக வழங்கப்பட்ட விளையாட்டு உபகரணங்கள் முறையான பராமரிப்பின்றி வீணான சம்பவம் பெரும்...

பட்டுக்கோட்டை : அதிமுக கூட்டணியில் மீண்டும் NR போட்டி? – புது...

பட்டுக்கோட்டை சட்டமன்றத் தொகுதியில் வரும் தேர்தலை முன்னிட்டு அரசியல் சூழல் பரபரப்பாகி வருகிறது. குறிப்பாக திமுக கூட்டணியில் வேட்பாளர் தேர்வு குறித்து கட்சித்...

அதிராம்பட்டினம் பேருந்து நிலையத்தில் மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணி சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம்.

அதிராம்பட்டினம் திமுக மேற்கு கழகம் முன்னிலையில், மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணி கட்சிகள் சார்பில் மத்திய அரசின் மக்கள் விரோத கொள்கைகளை கண்டித்து கண்டன...
spot_imgspot_imgspot_imgspot_img