Sunday, February 1, 2026

களத்தில் குதித்த அதிரை அனைத்து முஹல்லா கூட்டமைப்பு! பிறந்தது தெளிவு!!

spot_imgspot_imgspot_imgspot_img

இன்று 08.05.2020 மேலத் தெரு தாஜுல் இஸ்லாம் சங்கத்தில், மேலத் தெரு சங்க சார்பாக பால் வினியோகித்தல் சம்மந்தமாக நமதூர் அருகாமை கிராமங்களின் ஊராட்சிமன்ற தலைவர்கள் சந்திப்புக்கு ஏற்பாடு செய்யப்பட்டது. அதில் அனைத்து முஹல்லா கூட்டமைப்பின் தலைவர், செயளால்ர் சிறப்பு அழைப்பாளர்களாக கலந்துக் கொண்டார்கள். இக்கூட்டம் அதிரை அனைத்து முஹல்லா கூட்டமைப்பு தலைவர் MSM. அபுபக்கர் அவர்கள் தலைமையில் நடைபெற்றது. இக்கூட்டத்தில் PMK. தாஜுதீன், M. நெய்னா முஹம்மது, MMS. முஹம்மது இக்பால் மற்றும் அருகாமையில் உள்ள கிராமங்களான துவரங்குறிச்சி, பழஞ்சூர், அணைகாடு, உள்ளுர் புதுக்கோட்டை, மழவேனிற்காடு, தொக்காலிக்காடு, மகிழங்கோட்டை, நடுவிக்காடு ஆகிய கிராமங்களின் ஊராட்சி மன்ற தலைவர்கள் மற்றும் முக்கிய பிரமுகர்கள் முன்னிலை வகித்தனர்.

இக்கூட்டத்தில் கலந்துக் கொண்ட அனைவரின் ஒப்புதலுடன் கீழ்காணும் தீர்மானங்கள் ஏகமனதாக நிறைவேற்றப்பட்டது.

தீர்மானம் 1:
பால் வினியோகம் சம்மந்தமாக தமிழக அரசின் ஊரடங்கு விதி அமலில் உள்ளதாலும், கொரோனா தொற்று பற்றிய ஆபத்து இருப்பதாலும், வருகிற 17.05.2020 ந் தேதி வரை அதிரை அனைத்து முஹல்லா கூட்டமப்பு சார்பில் தெருவாசிகளுக்கு பால் வினியோகிப்பது என்றும், எதிர்வரும் 18.05.2020 ந் தேதி முதல் முன்பிருந்தபடியே அதிராம்பட்டினத்தை சுற்றியுள்ள கிராமங்களிலிருந்து பால் வினியோகம் செய்து கொள்வது என்று முடிவு செய்யப்பட்டது.

தீர்மானம்: 2

அதிராம்பட்டினத்தில் வசிக்கும் விவசாயிகள் தங்கள் விளைநிலங்கள் அமைந்துள்ள அதிராம்பட்டினத்தை சுற்றியுள்ள கிராமங்களான தொக்கலிக்காடு, மகிழங்கோட்டை, பழஞ்சூர், உள்ளூர் புதுக்கோட்டை, மழவேனிற்காடு, அணைக்காடு, நடுவிக்காடு, துவரங்குறிச்சி ஆகிய கிராமங்களுக்கு சென்று வருவதற்கு எந்தவிதமான தடையும் இல்லை என்று முடிவு செய்யப்பட்டது.

தீர்மானம் 3:

விவசாயிகள் தங்கள் விளைநிலங்களை பராமரிக்கச் செல்லும்போது முறையாக தமிழ அரசு வழிகாட்டியுள்ள விதிமுறைகளை பேனிக் கொள்ள வேண்டும் என்றும், ஒருவர் அல்லது வயதானவர்களாக இருந்தால் இருவர் மட்டுமே முகக்கவசம் அனிந்து சென்று வருவது என்றும், தனிமனித இடைவெளி கண்டிப்பாக கடைபிடிக்க வேண்டும், கூட்டமாக சென்று வருவது கூடாது என்றும் ஏகமனதாக ஒப்புக் கொள்ள்ப்பட்டது.

தீர்மானம் 4:

எதிர் வரும் காலங்களில் ஜாதி, மத பேதங்களின்றி ஒற்றுமையுடன் நாட்டின் முன்னேற்றத்திற்கு ஒருமனதாக செயலாற்றுவோம் என ஏகமனதாக தீர்மானிக்கப்பட்டது.

spot_imgspot_imgspot_imgspot_img

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

spot_imgspot_imgspot_imgspot_img

More like this

கல்வித்தந்தை மறைவு முதலமைச்சர், முஸ்லீம் லீக் பொதுச்செயலாளர் இரங்கல்.

அதிராம்பட்டினம் இமாம் ஷாஃபி கல்வி அறக்கட்டளையின் நிறுவனர் மற்றும் சீபோல் நிறுவனத்தின் தலைவருமான சிறந்த தொழிலதிபர் எம்.எஸ். தாஜூதீன் அவர்கள் வயது மூப்பின்...

பலநாள் கனவு நிறைவேறியது – உற்சாக வெள்ளத்தில் அதிரையர்கள்!

அதிராம்பட்டினம் வழியாக செல்லும் தாம்பரம் - செங்கோட்டை அதிவிரைவு ரயில் மற்றும் தாம்பரம் - ராமேஸ்வரம் பாம்பன் விரைவு ரயில் ஆகியவற்றுக்கு அதிராம்பட்டினத்தில்...

IUML தேசிய தலைவரை சந்தித்த அதிரை முஸ்லீம் லீக்கினர் – மாநாட்டிற்கு...

அதிராம்பட்டினம் நகர இந்திய யூனியன் முஸ்லிம் லீக் நகர நிர்வாகிகள், கட்சியின் தேசிய தலைவர் பேராசிரியர் தகைசால் தமிழர் கே.எம். காதர் முகைதீன்...
spot_imgspot_imgspot_imgspot_img