Sunday, February 1, 2026

தமிழகம் உள்பட பிற மாநிலத்தில் இருந்து கர்நாடகா வருபவர்களுக்கு அதிரடி நிபந்தனை !

spot_imgspot_imgspot_imgspot_img

தமிழகம், ஆந்திரா, தெலுங்கானா, மகாராஷ்டிரா, மத்திய பிரதேசம், டெல்லி உள்ளிட்ட பல்வேறு மாநிலங்களை ஒப்பிடும் போது கர்நாடகாவில் கொரோனா தொற்று மிக குறைந்த அளவே பரவி உள்ளது. இதுவரை சுமார் 860 பேருக்குதான் தொற்று ஏற்பட்டுள்ளது. அதிலும் பாதிக்கும் மேற்பட்டோர் குணம் அடைந்துவிட்டனர். மீதமுள்ளோர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்கள்.

இந்நிலையில் தமிழகம் உள்பட அண்டை மாநிலங்களில் கொரோனா பாதிப்பு அதிகம் இருப்பதால் அங்கிருந்து வருவருக்கு கடும் கட்டுப்பாடுகளை கர்நாடகா அரசு விதித்துள்ளது.

இதன்படி நாட்டின் எந்த மாநிலத்தில் இருந்தும் கர்நாடகாவிற்கு திரும்பி வரும் பயணிகள் கட்டாயம் 14 நாட்கள் சொந்த செலவில் பள்ளிகள் அல்லது விடுதிகள் அல்லது ஓட்டலில்களில் தனி அறையில் தங்கியிருக்க வேண்டியது கட்டாயம் என்று அறிவித்துள்ளது.

14 நாட்கள் தனிமைப்படுத்துதலுக்கு ஒப்புக்கொள்பவர்களை மட்டுமே அம்மாநில போலீசார் கர்நாடகா எல்லைக்குள் அனுமதிக்கிறார்கள். மற்றவர்களை நேற்று முதல் அனுமதிக்கவில்லை.

வெளிமாநிலங்களில் இருந்து வந்து பெங்களூரில் உள்ள ஓட்டலில் தனி அறையில் 14 நாட்கள் இருக்க விரும்புவோருக்கு ஓட்டல் கட்டணத்தை மாநகராட்சி அதிகாரிகள் நிர்ணயம் செய்வார்கள் என்றும் அம்மாநில சுகாதாரத்துறை அறிவித்துள்ளது.

spot_imgspot_imgspot_imgspot_img

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

spot_imgspot_imgspot_imgspot_img

More like this

2026 திமுகவின் வாக்கு வங்கி சரியும் அபாயம் – முதல்வர் நேரடி...

அதிராம்பட்டினம் பழைய இமாம் ஷாஃபி பள்ளிக்கூடத்தின் பழைய நிலத்தை கையகப்படுத்த முயலும் உள்ளூர் திமுகவினரின் தொடர் சீண்டல்கள், சிறுபான்மை சமூகத்தில் ஆழமான மனமாற்றத்தை...

பீகார் முதல்வரின் ஈனச்செயல் : பகிரங்க மன்னிப்பு கேட்க வேண்டும் –...

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் தஞ்சை தெற்கு மாவட்டத் தலைவர் வழக்கறிஞர் ஹாஜா ஜியாவுதீன்  வெளியிட்டுள்ள அறிக்கையில் பிகார் மாநிலத்தில் நடைபெற்ற ஒரு நிகழ்ச்சியில்...

புதிய வாக்காளர்கள் தவறாமல் தங்களை இணைத்து கொள்ளவேண்டும் – அதிரை நகர...

அதிராம்பட்டினம் நகரில் புதிய வாக்காளர்கள் தங்களை இணைத்து கொள்ள, சிறப்பு முகாம் அந்தந்த வாக்குச்சவடிகளில் நாளை 13-12-2025 அன்று நடைப்பெற உள்ளன. இதனை புதிய...
spot_imgspot_imgspot_imgspot_img