Monday, February 2, 2026

திரிணாமுல் காங்கிரஸ் எம்எல்ஏ தமானாஷ் கோஷ் கொரோனாவால் உயிரிழப்பு !

spot_imgspot_imgspot_imgspot_img

இந்தியா முழுவதும் கொரோனாவின் உக்கிர தாண்டவம் ஆயிரக்கணக்கான உயிர்களை குடித்து வருகிறது. கொரோனாவுக்கு தமிழகத்தில் திமுக எம்.எல்.ஏ. ஜெ. அன்பழகன் பலியானார்.

இந்தியாவிலேயே கொரோனாவுக்கு பலியான முதல் எம்.எல்.ஏ. ஜெ. அன்பழகன். அவரது மரணம் தமிழகத்தை பெரும் அதிர்ச்சிக்குள்ளாக்கியது.

இந்த நிலையில் மேற்கு வங்கத்தில் ஆளும் திரிணாமுல் காங்கிரஸ் எம்.எல்.ஏ. தமோனாஷ் கோஷ் கொரோனாவால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பலனின்றி காலமானார். மேற்கு வங்கத்தின் பால்டா தொகுதியில் இருந்து 3 முறை எம்.எல்.ஏ.வாக தேர்ந்தெடுக்கப்பட்டவர் கோஷ்.

திரிணாமுல் காங்கிரஸ் கட்சியின் பொருளாளராகவும் பதவி வகித்தவர் கோஷ். அவரது மறைவு மேற்கு வங்கத்தில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இது தொடர்பாக ட்விட்டரில் பதிவிட்டுள்ள திரிணாமுல் காங்கிரஸ் தலைவரும் மேற்கு வங்க முதல்வருமான மமதா பானர்ஜி, 33 ஆண்டுகாலம் எங்களுடன் இருந்தவர். அர்ப்பணிப்புடனேயே கட்சிப் பணியையும் மக்கள் பணியையும் ஆற்றியவர். கோஷின் மறைவுக்கு எனது ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக் கொள்கிறேன் என கூறியுள்ளார்.

spot_imgspot_imgspot_imgspot_img

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

spot_imgspot_imgspot_imgspot_img

More like this

2026 திமுகவின் வாக்கு வங்கி சரியும் அபாயம் – முதல்வர் நேரடி...

அதிராம்பட்டினம் பழைய இமாம் ஷாஃபி பள்ளிக்கூடத்தின் பழைய நிலத்தை கையகப்படுத்த முயலும் உள்ளூர் திமுகவினரின் தொடர் சீண்டல்கள், சிறுபான்மை சமூகத்தில் ஆழமான மனமாற்றத்தை...

பீகார் முதல்வரின் ஈனச்செயல் : பகிரங்க மன்னிப்பு கேட்க வேண்டும் –...

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் தஞ்சை தெற்கு மாவட்டத் தலைவர் வழக்கறிஞர் ஹாஜா ஜியாவுதீன்  வெளியிட்டுள்ள அறிக்கையில் பிகார் மாநிலத்தில் நடைபெற்ற ஒரு நிகழ்ச்சியில்...

புதிய வாக்காளர்கள் தவறாமல் தங்களை இணைத்து கொள்ளவேண்டும் – அதிரை நகர...

அதிராம்பட்டினம் நகரில் புதிய வாக்காளர்கள் தங்களை இணைத்து கொள்ள, சிறப்பு முகாம் அந்தந்த வாக்குச்சவடிகளில் நாளை 13-12-2025 அன்று நடைப்பெற உள்ளன. இதனை புதிய...
spot_imgspot_imgspot_imgspot_img