Saturday, September 13, 2025

பெண் உள்ளாட்சி பிரதிநிதிகளுக்கு பதிலாக உறவினர்கள் செயல்பட தடை

spot_imgspot_imgspot_imgspot_img

புதுக்கோட்டை மாவட்டத்தில் தேர்ந்தெடுக்கப்பட்ட பெண் உள்ளாட்சிப் பிரதிநிதிகளுக்கு பதிலாக அவரது கணவரோ, உறவினர்களோ உள்ளாட்சி நடவடிக்கைகளில் ஈடுபட முற்றிலும் தடை செய்யப்பட்டுள்ளது.

இதுகுறித்து மாவட்ட ஆட்சியர் உமாமகேஸ்வரி தெரிவித்ததாவது, “நடந்து முடிந்த உள்ளாட்சித் தேர்தலில் தேர்ந்தெடுக்கப்பட்டு ஊராட்சிமன்ற அலுவலகங்கள், ஊராட்சி ஒன்றியங்கள், மாவட்ட ஊராட்சி அலுவலகங்களில் பெண் உள்ளாட்சி பிரதிநிதிகள் தங்களுக்கு வழங்கப்பட்டுள்ள உரிமைகளை முழுமையாக பயன்படுத்தி சுதந்திரமாகவும், சிறப்பாகவும் செயல்பட அரசாணை (நிலை) எண்: 60, நாள்: 23.05.2016, தமிழ்நாடு ஊராட்சிகள் சட்டம் 1994-இன்படியும், அரசு அறிவுறுத்தியுள்ளது.
அந்த வகையில் ஆய்வுக் கூட்டங்களிலோ, ஊராட்சிமன்றக் கூட்டங்கள், கிராமசபைக் கூட்டங்களில் தொடர்புடைய பெண் ஊராட்சிமன்றத் தலைவருக்கு பதிலாக அவரது கணவரோ, நெருங்கிய உறவினர்களோ செயல்படுவதை முற்றிலும் தவிர்க்கப்பட வேண்டும்.
மேலும், ஏதேனும் புகார்கள் இருப்பின், அதனை மாவட்ட ஆட்சியர் அலுவலக கட்டணமில்லா 1800-425-9013 என்ற தொலைபேசி எண்ணிலோ, 04322-222171 என்ற அலுவலக தொலைபேசி எண்ணிலோ தெரிவிக்கலாம்” என்றார்.

நன்றி :ETV Bharath

spot_imgspot_imgspot_imgspot_img

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

spot_imgspot_imgspot_imgspot_img

More like this

பேராசிரியர் காதர் மொய்தீனுக்கு தமிழ்நாடு அரசின் ‘தகைசால் தமிழர்’ விருது அறிவிப்பு!

இந்திய யூனியன் முஸ்லிம் லீக் தேசிய தலைவர் கே.எம்.காதர் மொய்தீனுக்கு தகைசால் தமிழர் விருதை தமிழக அரசு அறிவித்துள்ளது. அவருக்கு ரூபாய் 10...

அதிரையில் தென்னிந்திய AFFA கால்பந்து தொடர் : செமி ஃபைனலில் AFFA...

அதிரை ஃபிரண்ட்ஸ் ஃபுட்பால் அசோசியேஷன் சார்பில் தென்னிந்திய அளவிலான கால்பந்து தொடர் போட்டி AFWA மைதானத்தில் நடைபெற்று வருகிறது. இந்நிலையில், இன்று நடைபெற்ற இரண்டாவது...

தமிழ்நாடு தலைமை காஜி முஃப்தி. சலாஹூதீன் முஹம்மது அயூப் வஃபாத்தானார்!

தமிழ்நாடு அரசின் தலைமை காஜியாக இருந்துவந்த மௌலவி. முஃப்தி. டாக்டர். சலாஹூதீன் முஹம்மது அய்யூப்(வயது 84) இன்று 24/05/2025 சனிக்கிழமை இரவு 9...
spot_imgspot_imgspot_imgspot_img