Saturday, September 13, 2025

மூணாறு நிலச்சரிவில் வீடுகளை இழந்தவர்களுக்கு வீடு கட்டி கொடுக்கப்படும் – கேரள முதல்வர் அறிவிப்பு !

spot_imgspot_imgspot_imgspot_img

கேரள மாநிலம் மூணாறு ராஜமலை அருகே உள்ள பெட்டிமுடி பகுதி தேயிலைத் தோட்டத் தொழிலாளர்கள் குடியிருப்பு, கடந்த ஆகஸ்ட் 6-ம் தேதி இரவு நிலச்சரிவில் சிக்கியது. இதில், 71 பேர் மண்ணில் புதைந்து உயிரிழந்தனர். சம்பவம் நடந்த அடுத்த நாளான ஆகஸ்ட் 7-ம் தேதி மதியம் முதல், மீட்புப் பணிகள் நடைபெற்றுவருகிறது. இதுவரை 55 நபர்களின் உடல்கள் மீட்கப்பட்டுள்ள சூழலில், மேலும், 16 நபர்களின் உடல்களைத் தேடும் பணியில் மீட்புக் குழு 8-வது நாளாக ஈடுபட்டுவருகிறது.

இந்நிலையில், சம்பவ இடத்தினை இரு தினங்களுக்கு முன்னர், கேரள மாநில முன்னாள் முதல்வர் உம்மன்சாண்டி பார்வையிட்டு ஆய்வு செய்தார். மேலும் அவர், மீட்புக் குழுவினரிடம் சம்பவம் குறித்தும், மீட்புப் பணிகள் குறித்தும் கேட்டறிந்தார்.

இந்நிலையில், கேரள முதல்வர் பினராயி விஜயன் மற்றும் மாநில ஆளுநர் ஆரிஃப் முகமது கான் இருவரும் நேற்று காலை, ஹெலிகாப்டர் மூலம் மூணாறு வந்தடைந்தனர். முதலில், நிலச்சரிவில் சிக்கி, படுகாயத்துடன் மீட்கப்பட்டு, மூணாறு தனியார் மருத்துவமனையில் சிகிச்சை எடுத்துவரும், நபர்களை சந்தித்து நலம் விசாரித்தனர். தொடர்ந்து, நிலச்சரிவு நடந்த பெட்டிமுடிக்குச் சென்று ஆய்வு நடத்தினர்.

பத்திரிகையாளர்களிடம் பேசிய பினராயி விஜயன், பாதிக்கப்பட்டவர்களுக்கு அரசு முழுமையான மறு வாழ்வு உதவிகளை அளிக்கும். பெட்டிமுடியில் உள்ள அனைத்து குடும்பங்களுக்கும், வேறு இடத்தில் வீடுகள் கட்டிக்கொடுக்கப்படும். இச்சம்பவத்தில் பாதிக்கப்பட்ட குழந்தைகளின் கல்விச் செலவு முழுவதையும் அரசு ஏற்கும். காயம்பட்டு மருத்துவமனையில் சிகிச்சையில் இருப்பவர்களின் மருத்துவச் செலவுகளையும் அரசு ஏற்கும்." என்றார். ஆளுநர்,பெட்டிமுடி சம்பவம் சோகமான நிகழ்வு” என்றார்.

spot_imgspot_imgspot_imgspot_img

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

spot_imgspot_imgspot_imgspot_img

More like this

அதிரையில் தென்னிந்திய AFFA கால்பந்து தொடர் : AFFA அணியின் வேகத்தில்...

அதிரை ஃபிரண்ட்ஸ் ஃபுட்பால் அசோசியேஷன் சார்பில் தென்னிந்திய அளவிலான கால்பந்து தொடர் போட்டி நடைபெற்று வருகிறது. இதில் பல்வேறு கால்பந்து தொடர்களில் தலைசிறந்து விளங்கும்...

தென்னிந்திய அளவிலான AFFA கால்பந்து தொடர் : ஆலத்தூரை சாய்த்து, வெற்றிக்...

அதிரை ஃபிரண்ட்ஸ் ஃபுட்பால் அசோசியேஷன் சார்பில் தென்னிந்திய அளவிலான கால்பந்து தொடர் போட்டி கடந்த 20.06.2025 வெள்ளிக்கிழமை AFWA வின் மைதான திறப்பு...

வழிபாட்டுத் தலங்கள் தொடர்பாக நாடு முழுவதிலும் உள்ள நீதிமன்றங்கள் எந்த உத்தரவும்...

வழிபாட்டுத்தலங்கள் சட்டம் 1991க்கு எதிராக தொடரப்பட்ட மனு மீதான விசாரணை உச்சநீதிமன்றத்தில் தலைமை நீதிபதி சஞ்சீவ் கண்ணா தலைமையிலான அமர்வு முன்பு நேற்று...
spot_imgspot_imgspot_imgspot_img