Wednesday, March 18, 2026

செந்தலைப்பட்டினத்தில் TNTJ நடத்திய மாபெரும் ரத்ததான முகாம் !

spot_imgspot_imgspot_imgspot_img

நாட்டின் 74வது சுதந்திர தினத்தை முன்னிட்டு தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் சார்பில் தமிழகம் முழுவதும் இரத்ததான முகாம் நடைபெற்று வருகிறது.

அதன் ஒரு பகுதியாக 104வது இரத்ததான முகாம் தஞ்சை மாவட்டம் செந்தலைப்பட்டினத்தில் இன்று திங்கட்கிழமை நடைபெற்றது.

இம்முகாமிற்கு தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத்தின் தஞ்சை தெற்கு மாவட்ட தலைவர் கே. ராஜிக் முகமது தலைமை வகித்தார். மாவட்ட மருத்துவ அணி செயலாளர் ஹாஜா ஜியாவுதீன் முன்னிலை வகித்தார். இம்முகாமில் சிறப்பு அழைப்பாளர்களாக வட்டார மருத்துவ அலுவலர் டாக்டர். ராமலிங்கம் மற்றும் செந்தலைப்பட்டினம் ஊராட்சி மன்றத்தலைவர் ரஹ்மத்துல்லாஹ் ஆகியோர் பங்கேற்றனர். இதில் 100க்கும் மேற்பட்ட பொதுமக்கள் கலந்துகொண்டு 50 யூனிட் ரத்தம் தானமாக தஞ்சை ராஜா மிராசுதார் அரசு மருத்துவமனைக்கு வழங்கினர்.

இம்முகாமில் மாவட்ட துணை செயலாளர் பாவா, மாவட்ட மாணவரணி இத்ரீஸ், செந்தலைப்பட்டினம் கிளை தலைவர் ஜகுபர் அலி, செயலாளர் ஜமால் முஹம்மத், பொருளாளர் ரியாஸ் அஹ்மத், துணை தலைவர் தாஜுதீன் துணை செயலாளர் சேட் முஹம்மது மற்றும் மாணவரணி பைசல் கான், தொண்டரணி ஜமால் முஹைதீன், சலீம், சாபீர் கான், ஜாஹீர் உசேன், சாபீத் தவாஸ் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர். முகாமிற்கான எற்பாடுகளை செந்தலைப்பட்டினம் மருத்துவ அணி பாரீஸ் சிறப்பாக செய்திருந்தார்.

spot_imgspot_imgspot_imgspot_img

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

spot_imgspot_imgspot_imgspot_img

More like this

அதிரை நகராட்சியின் “உப்பி போன” விளையாட்டுத் திட்டம்!

தஞ்சாவூர் மாவட்டம் அதிராம்பட்டினம் நகராட்சியில், கடந்த சில தினங்களுக்கு முன்பு இளைஞர்களுக்காக வழங்கப்பட்ட விளையாட்டு உபகரணங்கள் முறையான பராமரிப்பின்றி வீணான சம்பவம் பெரும்...

பட்டுக்கோட்டை : அதிமுக கூட்டணியில் மீண்டும் NR போட்டி? – புது...

பட்டுக்கோட்டை சட்டமன்றத் தொகுதியில் வரும் தேர்தலை முன்னிட்டு அரசியல் சூழல் பரபரப்பாகி வருகிறது. குறிப்பாக திமுக கூட்டணியில் வேட்பாளர் தேர்வு குறித்து கட்சித்...

அதிராம்பட்டினம் பேருந்து நிலையத்தில் மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணி சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம்.

அதிராம்பட்டினம் திமுக மேற்கு கழகம் முன்னிலையில், மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணி கட்சிகள் சார்பில் மத்திய அரசின் மக்கள் விரோத கொள்கைகளை கண்டித்து கண்டன...
spot_imgspot_imgspot_imgspot_img