Sunday, February 1, 2026

விமானத்தில் சிகரட்,சிறைப்பிடித்த சிப்பந்திகள்!

spot_imgspot_imgspot_imgspot_img

சென்னையிலிருந்து, பீஹார் மாநிலம், பாட்னாவிற்கு, நேற்று பகல், 12:20 மணிக்கு, விமானம் ஒன்று புறப்பட தயாராக இருந்தது. அந்த விமானத்தில் செல்ல வந்த, பீஹார் மாநிலத்தைச் சேர்ந்த, பிரவீன் குமார் ஷர்மா, 40 என்பவர், விமானத்தில் ஏறி, அவருக்கான இருக்கையில் அமர்ந்தவுடன், சிகரெட் எடுத்து, பற்ற வைத்தார். இதைக்கண்ட விமான ஊழியர்கள், ‘விமானத்திற்குள் சிகரெட் பிடிப்பது தடை செய்யப்பட்டுள்ளது.

இதனால், விமானம் எளிதில் தீப்பிடிக்கும் அபாயம் உள்ளது’ என்றனர். பிரவீன் குமார், எதையும் கண்டுகொள்ளாமல், தொடர்ந்து சிகரெட் பிடித்தார். இதுகுறித்து, விமான நிலைய பாதுகாப்பு அதிகாரிகளுக்கு, தகவல் கொடுக்கப்பட்டது. அவர்கள் விரைந்து, பிரவீன் குமாரை விமானத்திலிருந்து வெளியே அழைத்து வந்தனர். அவரை மேல் விசாரணைக்காக, விமான நிலைய போலீசாரிடம் ஒப்படைத்தனர். இந்த சம்பவத்தால், விமான நிலையத்தில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.

spot_imgspot_imgspot_imgspot_img

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

spot_imgspot_imgspot_imgspot_img

More like this

IUML தேசிய தலைவரை சந்தித்த அதிரை முஸ்லீம் லீக்கினர் – மாநாட்டிற்கு...

அதிராம்பட்டினம் நகர இந்திய யூனியன் முஸ்லிம் லீக் நகர நிர்வாகிகள், கட்சியின் தேசிய தலைவர் பேராசிரியர் தகைசால் தமிழர் கே.எம். காதர் முகைதீன்...

அதிரை ரயில் நிறுத்தம் தொடர்பாக போராட்டம்தான் தீர்வு என்றால் அதற்கும் தயார்- ...

அதிராம்பட்டினம் ரயில் நிறுத்தம் தொடர்பாக தேவைப்பட்டால் திமுக, காங்கிரஸ், முஸ்லீம் லீக் உள்ளிட்ட தோழமை கட்சிகளை ஒன்றிணைத்து ஒன்றிய ரயில்வே நிர்வாகத்தை கண்டிக்கும்...

இமாம் ஷாஃபி விவகாரம் : ஆட்சியரிடம் அளிக்கப்பட்ட மனு.

அதிராம்பட்டினம் இமாம் ஷாஃபி பள்ளி நில விவகாரம்: தஞ்சை ஆட்சியரிடம் விரிவான மனு அளிப்பு! அதிராம்பட்டினம் பழைய இமாம் ஷாஃபி பள்ளி தொடர்பான நீண்டகால...
spot_imgspot_imgspot_imgspot_img