Sunday, February 1, 2026

எதற்காக இந்த ஓட்டம் ???

spot_imgspot_imgspot_imgspot_img

Image result for running

 

 

 

 

Running

எல்லோரும் அதி வேகமாக
ஓடுகிறார்கள்.

நவீனம் நடத்தும் பொருளாதார
பந்தயத்தில் ஓடுவதற்கு தடங்கலாக
இருந்த சொந்த ஊர்களை உதறி தள்ளிவிட்டு
வேகமாக ஓடினார்கள்….

பந்தயம் கடினமாக இருந்தபோது
வேகத்தை மேலும் கூட்ட
தாய் மொழி தடையாக இருக்கவே
அதையும் ஒதுக்கி வைத்து
ஓடினார்கள்.

பின்னர்
தர்ம சிந்தனைகள், கடமை, கண்ணியம் கூட
சுமைகளாயிப்போயின….
எனவே அவை அனைத்தையும் உதறித்
தள்ளிவிட்டு ஓட்டத்தை தொடர்ந்தனர்..

உறவுகள் சுமையாக, தொந்தரவாக
அவர்களுக்கு தோன்றின..
அவற்றையும் விட்டுத் தள்ளினார்கள் அல்லது
விலகி ஓடினார்கள்.

இந்த நவீன மனிதர்களுக்குப்
பொருளாதார வசதி புகழ் —
வெற்றிகரமான வாழ்க்கை என்ற அடங்காத
வெறி மட்டுமே எஞ்சி உள்ளதால்
பந்தயத்தில் வேக வேகமாக ஓடிக்கொண்டிருக்கிறார்கள்.

இனி அவர்கள் வீசி எறிய வேறு
எதுவும் இல்லை..!

படித்ததில் பிடித்தது.
நன்றி.

spot_imgspot_imgspot_imgspot_img

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

spot_imgspot_imgspot_imgspot_img

More like this

அதிரை இமாம் ஷாபி பள்ளி மற்றும் Seapol குழுமங்களின் நிறுவனர் கல்வி...

அதிராம்பட்டினம் செக்கடித் தெருவை சார்ந்த மர்ஹூம்.M M சம்சுதீன் ஹாஜியார் அவர்களின் மகனாரும் மர்ஹூம்.ஹாஜி.M S ஜமாலுதீன்,மர்ஹூம்.ஹாஜி M S முகைதீன் ஆலீம்,ஹாஜி...

2026 திமுகவின் வாக்கு வங்கி சரியும் அபாயம் – முதல்வர் நேரடி...

அதிராம்பட்டினம் பழைய இமாம் ஷாஃபி பள்ளிக்கூடத்தின் பழைய நிலத்தை கையகப்படுத்த முயலும் உள்ளூர் திமுகவினரின் தொடர் சீண்டல்கள், சிறுபான்மை சமூகத்தில் ஆழமான மனமாற்றத்தை...

அதிரை பயிற்சி மைய சாதனை: 6 மாணவர்கள் அரசுப் பணி தேர்வில்...

அதிராம்பட்டினம், டிசம்பர் 12அதிராம்பட்டினத்தில் செயல்படும் மௌலானா அப்துல் கலாம் ஆசாத் பயிற்சி மையத்தின் 6 மாணவர்கள் தமிழ்நாடு அரசின் பல்துறை அரசுப் பணிகளுக்குத்...
spot_imgspot_imgspot_imgspot_img