Sunday, February 1, 2026

பட்டுக்கோட்டையில் தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் நடத்திய மாபெரும் இரத்ததான முகாம் !(படங்கள்)

spot_imgspot_imgspot_imgspot_img

தஞ்சாவூர் மாவட்டம் பட்டுக்கோட்டையில் தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் சார்பில் மாபெரும் இரத்ததான முகாம் இன்று நடைபெற்றது.

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் தஞ்சை தெற்கு மாவட்டம் பட்டுக்கோட்டை கிளை மற்றும் தஞ்சை அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனை இணைந்து நடத்திய மாபெரும் இரத்ததான முகாம் பட்டுக்கோட்டை நகராட்சி முஸ்லீம் நடுநிலைப்பள்ளியில் நடைபெற்றது.

இந்த முகாமிற்கு தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத்தின் தஞ்சை மாவட்ட மருத்துவரணி செயலாளர் ஹாஜா ஜியாவுதீன் தலைமை வகித்தார். மாவட்ட பொருளாளர் அஷ்ரப் அலி முன்னிலை வகித்தார். மேலும் இதில் பட்டுக்கோட்டை கிளை தலைவர் பாரூக், செயலாளர் பதுருதீன், பொருளாளர் அலாவுதீன், துணை தலைவர் சாகுல், துணை செயலாளர் கான்சாகிப், மாணவரணி உமர், தொண்டரணி ஜுபைர், வர்த்தகரணி ஷாஜகான் ஆகியோர் பங்கேற்றனர். இம்முகாமினை பட்டுக்கோட்டை கிளை மருத்துவரணி சித்திக் ஏற்பாடு செய்திருந்தார். இம்முகாமில் தமிழி கல்வி மற்றும் தொண்டு நிறுவனத்தின் தலைவர் அருண்ராஜ், துணைத்தலைவர் சேக்தாவூத் மற்றும் அதன் உறுப்பினர்கள் பங்கேற்று இரத்ததானம் செய்தனர்.

இம்முகாமில் 100க்கும் மேற்பட்ட ஆண்கள், பெண்கள் பங்கேற்று இரத்ததானம் செய்தனர். இதன்மூலம் தானமாக பெறப்பட்ட 50 யூனிட் ரத்தம், தஞ்சை அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையின்(TMCH) முதல்வர் Dr.M. ஜெயந்தி மற்றும் இரத்த வங்கி அலுவலர் கண்ணன் ஆகியோரிடம் வழங்கப்பட்டது.

spot_imgspot_imgspot_imgspot_img

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

spot_imgspot_imgspot_imgspot_img

More like this

கல்வித்தந்தை மறைவு முதலமைச்சர், முஸ்லீம் லீக் பொதுச்செயலாளர் இரங்கல்.

அதிராம்பட்டினம் இமாம் ஷாஃபி கல்வி அறக்கட்டளையின் நிறுவனர் மற்றும் சீபோல் நிறுவனத்தின் தலைவருமான சிறந்த தொழிலதிபர் எம்.எஸ். தாஜூதீன் அவர்கள் வயது மூப்பின்...

பலநாள் கனவு நிறைவேறியது – உற்சாக வெள்ளத்தில் அதிரையர்கள்!

அதிராம்பட்டினம் வழியாக செல்லும் தாம்பரம் - செங்கோட்டை அதிவிரைவு ரயில் மற்றும் தாம்பரம் - ராமேஸ்வரம் பாம்பன் விரைவு ரயில் ஆகியவற்றுக்கு அதிராம்பட்டினத்தில்...

IUML தேசிய தலைவரை சந்தித்த அதிரை முஸ்லீம் லீக்கினர் – மாநாட்டிற்கு...

அதிராம்பட்டினம் நகர இந்திய யூனியன் முஸ்லிம் லீக் நகர நிர்வாகிகள், கட்சியின் தேசிய தலைவர் பேராசிரியர் தகைசால் தமிழர் கே.எம். காதர் முகைதீன்...
spot_imgspot_imgspot_imgspot_img