Saturday, September 13, 2025

நாளை நடைபெற இருந்த பட்டுக்கோட்டை போராட்டம் ரத்து !

spot_imgspot_imgspot_imgspot_img

நபிகளாரை இழிவுப்படுத்தி பேசிய பாஜகவின் கல்யாணராமன் மீது தேசிய பாதுகாப்பு சட்டத்தின் படி நடவடிக்கை எடுக்க வேண்டும் என இஸ்லாமியர்கள் உள்ளிட்ட சமூக ஒற்றுமையாளர்கள் அரசுக்கு கோரிக்கை விடுத்தனர். முன்னதாக கைது செய்யப்பட்ட கல்யாண ராமனை கடுமையான சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுக்க கோரி பட்டுக்கோட்டை அனைத்து இஸ்லாமிய கூட்டமைப்பினர் சார்பில் நாளை கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற இருந்தன.

இந்த நிலையில் சற்றுமுன் நடைபெற்ற ஆலோசனை கூட்டத்தில் தமிழக காவல்துறையினர் கைது செய்யபட்டுள்ள கல்யாண ராமன் மீது குண்டர் தடுப்பு சட்டத்தின் படி நடவடிக்கை எடுக்க உள்ளதாகவும் அதற்கான ஆனையை வெளியிட்டுள்ளதை பட்டுக்கோட்டை காவல் துணை கன்காணிப்பாளர் மூலம் போராட்ட குழுவினருக்கு தெரிவிக்கப்பட்டு உள்ளன.

இதனை அடுத்து அவசரமாக கூட்டப்பட்ட நிர்வாகிகளின் ஆலோசனை கூட்டத்தின் வாயிலாக எடுக்கப்பட தீர்மானத்தின் படி நாளை 12-02-2021 அன்று நடைப்பெற இருந்த கண்டன ஆர்ப்பாட்டம் ரத்து செய்யப்படுவதாக தெரிவித்துள்ளனர்.

மேலும் சமய நல்லிணக்கத்திற்கு கேடு விளைவிக்கும் வகையில் செயல்படும் நபர்களை யாராக இருந்தாலும் சட்டத்தின் முன் நிறுத்தி தண்டனை வழங்கிட வேண்டும் என பட்டுக்கோட்டை அனைத்து இஸ்லாமிய கூட்டமைப்பினர் அரசுக்கு கோரிக்கை விடுத்துள்ளனர்.

spot_imgspot_imgspot_imgspot_img

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

spot_imgspot_imgspot_imgspot_img

More like this

பட்டுக்கோட்டை – அதிராம்பட்டினம் இடையே இரவு நேர சிறப்பு பேருந்து..!!

தினசரி  மாலை 6:10 மணியளவில் சென்னை தாம்பரத்திலிருந்து புறப்பட்டு நள்ளிரவு 1:08 மணிக்கு பட்டுக்கோட்டை வழியாக ராமேஸ்வரம் செல்கிறது. அதிராம்பட்டினம் நகராட்சி மற்றும் அதன்...

அதிரை காதிர் முகைதீன் கல்லூரியில் 12 ஆம் வகுப்பு மாணவர்களுக்கான உயர்கல்வி...

காதிர் முகைதீன் ஆண்கள் மேல்நிலைப்பள்ளி 12 ஆம் வகுப்பு மாணவர்களுக்கான அடுத்து என்ன மற்றும் எங்கு படிக்கலாம் என்ற உயர்கல்வி வழிகாட்டல் நிகழ்ச்சி...

அதிரை காதிர் முகைதீன் கல்லூரியில் 12 ஆம் வகுப்பு மாணவிகளுக்கான உயர்கல்வி...

காதிர் முகைதீன் பெண்கள் மேல்நிலைப்பள்ளி 12 ஆம் வகுப்பு மாணவிகளுக்காக அடுத்து என்ன மற்றும் எங்கு படிக்கலாம் என்ற உயர்கல்வி வழிகாட்டல் நிகழச்சி...
spot_imgspot_imgspot_imgspot_img